scorecardresearch

பெற்றோரின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்குமா?

ஆய்வின்படி, தாய்மார்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது, குழந்தைகளுக்கு இடையேயான தொடர்பு நான்கு மடங்கு குறைகிறது மற்றும் இது அவர்களின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கிறது.

mother-and-child-1200
Recent study reveals that smartphone usage by parents hinder child development

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி அதை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில், நீங்கள் பின்வாங்க வேண்டிய நேரமிது. ஒரு புதிய ஆய்வு கூறுவது போல, பெற்றோர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது, அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியை சீர்குலைக்கும் சாத்தியம் உள்ளது. ஆய்வின்படி, தாய்மார்கள் ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது, இருவருக்கும் இடையேயான தொடர்பு நான்கு மடங்கு குறைகிறது. இது அவர்களின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கிறது.

இந்த ஆய்வு குழந்தை வளர்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் சாக்லர் மருத்துவ கல்லூரியின், ஸ்டான்லி ஸ்டெயர் ஸ்கூல் ஆஃப் ஹெல்த் ப்ரொஃபெஷன்ஸின் தகவல் தொடர்பு கோளாறுகள் துறையின் டாக்டர் கேட்டி போரோட்கின் தலைமையில் நடந்த, இந்த ஆய்வு 33 இஸ்ரேலிய தாய்மார்களையும் அவர்களது 16 குழந்தைகளையும், (24-36 மாதங்களுக்கு இடைப்பட்ட) பரிசோதித்தது.

ஆய்வுக்காக, தாய்மார்கள் ஒரு குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தை உலாவவும், அவர்களுக்கு விருப்பமான உள்ளடக்கத்தை ‘லைக்’ செய்யவும், அச்சிடப்பட்ட பத்திரிகைகளைப் படிக்கவும் மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகளைக் குறிக்கவும் கேட்கப்பட்டனர். மேலும், தொலைபேசி மற்றும் பத்திரிக்கை வேறு அறையில் இருக்கும் போது குழந்தையுடன் விளையாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சோதனையின் நோக்கம் தாய்மார்களுக்குத் தெரியாது என்பதை போரோட்கின் வெளிப்படுத்தினார். “எனவே அவர்கள் சிறு குழந்தைகளுக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் பத்திரிகைகளுக்கும் இடையில் தங்கள் ஆர்வத்தைப் பிரிப்பதன் மூலம் இயல்பாக நடந்து கொண்டனர். தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளையும் நாங்கள் வீடியோவில் பதிவு செய்தோம், பின்னர் தாய்-குழந்தை தொடர்புகளை அளவிடும் முயற்சியில்’ ரெக்கார்டிங்குகளை ஃப்ரேம் பை ஃப்ரேம் ஸ்கேன் செய்தார்.

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பொதுவான நலன்களை ஆராய்வதற்காக அவர்கள் கவனிக்கப்படுவதாக பங்கேற்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

“நிஜ வாழ்க்கையில் தாய் தனது குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள்ளை உருவகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது, அதே சமயம் அவ தன் ஸ்மார்ட்ஃபோனில் கவனம் செலுத்துகிறாள்,” என்று அவர் விளக்கினார்.

ஒரு தாய்க்கும் அவளுடைய குழந்தைக்கும் இடையிலான தொடர்புகளின் மூன்று அம்சங்களை ஆராய்ச்சி குழு வரையறுத்தது:

தாய்வழி மொழியியல் உள்ளீடு- தாய் குழந்தைக்குத் தெரிவிக்கும் மொழியியல் உள்ளடக்கம், உரையாடல் திருப்பங்கள்- தாய்-குழந்தை வாய்மொழி பரிமாற்றத்தின் ஊடாடும் நிலை, மற்றும் தாய்வழி அக்கறை – தன் குழந்தையிடமிருந்து ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு தாயின் பதிலின் நேரம் மற்றும் குறிப்பிட்ட தன்மை.

தாய் தனது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும்போது அல்லது பத்திரிகையைப் படிக்கும்போது தாய்-குழந்தை தொடர்புகளின் இந்த மூன்று கூறுகளும் இரண்டு முதல் நான்கு மடங்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. “மேலும், அவர்கள் குறுநடை போடும் குழந்தையுடன் குறைவான உரையாடலை பரிமாறிக்கொண்டனர், குறைவான உடனடி மற்றும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப பதில்களை வழங்கினர், மேலும் பெரும்பாலும் வெளிப்படையான குழந்தையின் கேள்விகளை புறக்கணித்தனர்” என்று ஆய்வு கூறியது.

கூடுதலாக, ஸ்மார்ட்போனை உபயோகிப்பதும் வாசிப்பதும் சமமாக கவனத்தை சிதறடிக்கும் என ஆய்வின் முடிவு கூறியது. இருப்பினும், ஸ்மார்ட்போன் பயன்பாடு ஒப்பீட்டளவில் புதிய நிகழ்வு என்பதால் குழந்தையின் வளர்ச்சியை உண்மையில் பாதிக்கும் என்ற கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் அது கூறியது. தாயின் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு குழந்தைகளை பாதிக்கக்கூடியது மட்டுமல்ல. போரோட்கினைப் பொறுத்தவரை, இந்த ஆராய்ச்சி தந்தை-குழந்தை தொடர்புக்கும் பொருத்தமானதாக இருக்கலாம்.

“எங்கள் தற்போதைய ஆராய்ச்சியில் நாங்கள் தாய்மார்கள் மீது கவனம் செலுத்துகிறோம், ஆனால் எங்கள் கண்டுபிடிப்புகள் தந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு இடையேயான தொடர்பு குறுக்கீடுகளை வகைப்படுத்துகின்றன என்று நாங்கள் நம்புகிறோம், ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டு முறைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஒரே மாதிரியாக இருப்பதால், ஆராய்ச்சி முடிவுகள் தந்தை மற்றும் தாய்மார்களுக்கு பொருந்தும் என்பதை அதிக நிகழ்தகவுடன் மதிப்பிட அனுமதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Recent study reveals that smartphone usage by parents hinder child development