Recipe News In Tamil, Brinjal Thuvaiyal Tamil Video: நம்மில் பலர், கத்தரிக்காய் சுவைக்கு அடிமை. நியாயமான விலைக்கு கிடைப்பதும், பரவலாக நம் பகுதியிலேயே விளைவதும் கத்தரிக்காயை நாம் பயன்படுத்த வசதியாகவும் இருக்கிறது. அதனால்தான் கத்தரிக்காய் இல்லாமல் நம் வீடுகளில் சாம்பார் இல்லை.
அந்தக் கத்தரிக்காயை பொரியல், கூட்டு என வைத்து நாம் சாப்பிடுவதுண்டு. கத்தரிக்காய் துவையல் செய்து சாப்பிட்டுப் பார்த்தது உண்டா? இதோ, சுவையான கத்தரிக்காய் துவையல் செய்யும் முறையை இங்கு காணலாம்.
Brinjal Thuvaiyal Tamil Video: கத்தரிக்காய் துவையல்
கத்தரிக்காய் துவையல் செய்யத் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 3, காய்ந்த மிளகாய் – 3, மிளகு – 1 டீ ஸ்பூன், கடலைப் பருப்பு – 1 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்,
கடுகு – 1 டீ ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – 30 கிராம், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தாளிக்க
கத்தரிக்காய் துவையல் செய்முறை :
கத்தரிக்காயை காம்பு நீக்கி, கழுவி எடுங்கள். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அவற்றை வதக்கிக் கொள்ளவும். வதக்கி முடித்த கத்தரிக்காயை கைகளால் மசித்துக் கொள்ளுங்கள். மீண்டும் வாணலியில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுந்தம் பருக்கு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்குகள்.
பிறகு அதில் மசித்த கத்தரிக்காய் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். அடுத்து புளித் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் நன்கு இறுகி கெட்டிப் பதம் வரும் வரை வதக்கி கொதிக்க வையுங்கள்.
நன்கு கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு, இறக்கி விடுங்கள். இப்போது சுவையான கத்தரிக்காய் துவையல் தயார். மணமும் ருசியும் மிகுந்த இந்த கத்தரிக்காய் துவையலை சாதம், டிபன் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.