Recipe News In Tamil, Coconut Chutney Tamil Video: தேங்காய் சட்னி இல்லாமல் சமையலை ஓரிரு நாட்கள் நகர்த்துவதே கடினம். இட்லி, தோசையில் ஆரம்பித்து அனைத்து வகை டிபன்களுக்கும் தேங்காய் சட்னியை பயன்படுத்த முடியும். தேங்காயில் கொழுப்பு அதிகம் என சிலர் கூறுவார்கள். ஆனால் அது உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்து.
Advertisment
தேங்காய் சட்னி தயாரித்தால், பொதுவாக அதிக நேரம் தாங்காது. ஆனால் வறுத்து அரைத்த தேங்காய் சட்னி, கூடுதல் நேரம் பயன்படுத்தத் தக்கது. சுவையாகவும், கூடுதல் நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும் வகையிலும் தேங்காய் சட்னி தயார் செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Coconut Chutney Tamil Video: தேங்காய் சட்னி
Advertisment
Advertisements
தேங்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம்பருப்பு – 2 டீ ஸ்பூன், கடலைப் பருப்பு – 3 டீ ஸ்பூன், புளி, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
தேங்காய் சட்னி செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை வறுக்க வேண்டும். பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வையுங்கள்.
நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடி.
வறுத்து அரைத்த இந்த தேங்காய் சட்னி சுவையாகவும், கூடுதல் நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும். இப்படி தயார் செய்து, உண்டு மகிழுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"