Recipe News In Tamil, Idli Podi Tamil video: எப்போதும் சட்னி, சாம்பாருக்காக அல்லாடிக் கொண்டிருக்க முடியாது. ஒரு அவசர நேரத்தில் டிபனுக்கோ, டின்னருக்கோ கை கொடுப்பது இட்லி பொடி! வேலைக்கு செல்கிறவர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறவர்கள் அனைவருக்கும் இது வரப்பிரசாதம்!
இந்த இட்லிப் பொடியை சுவையாகவும், சத்து மிகுந்ததாகவும் செய்வது முக்கியம். செய்முறையும் சிம்பிளானதாக இருந்தால் உசிதம். ஒரு முறை இதைச் செய்தால், ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் என்பது இன்னும் வசதி! இட்லி பொடி எப்படி செய்யலாம்? என்பதை இங்கே பார்ப்போம்.
Idli Podi Tamil video: இட்லி பொடி
இட்லி பொடி செய்யத் தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு – 1/4 கப், சிவப்பு மிளகாய் – 2, பெருங்காயம் – தேவையான அளவு, வெள்ளை எள் – 1 டீ ஸ்பூன், தேங்காய் துருவியது – 1 டீ ஸ்பூன், அரிசி – 1 டீ ஸ்பூன், எண்ணெய் – 2 டீ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு
இட்லி பொடி செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயக் கட்டி, வெள்ளை எள், தேங்காய்த் துருவல், அரிசி ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவை சூடு போனதும், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் மொரமொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்… 10 நிமிட வேலையில் சூப்பரான இட்லி பொடி ரெடி. இதை வைத்து டிபன், டின்னரை ஜமாய்க்கலாம்.