Recipe news in tamil, Paruppu recipe: சப்பாத்திக்கு ஒரிஜினல் சைட் டிஷ், பருப்புதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடத் தோதான ஒரு உணவுப் பொருளாகவும், நம் வீட்டுக் கிச்சனில் எப்போதும் இருக்கிற ஒரு உணவுப் பொருளாகவும் பருப்பு இருப்பது இன்னும் வசதியாகிறது. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சப்பாத்திக்கு விரும்பும் முதல் சைட் டிஷ், பருப்பு (‘டால்’)தான்.
Advertisment
சப்பாத்தி டால் நம் வீட்டிலேயே மிக சுலபமாகவும் சுவையாகவும் செய்யலாம். சப்பாத்திக்கு சைட் டிஷ் டால் செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.
Paruppu recipe, chapati side dish dal making video: சப்பாத்தி டால்
சப்பாத்தி டால் செய்யத் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப், பாசிப் பருப்பு – 1 கப், கடலை பருப்பு – 1 கப், மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு, சீரகம் – 1 ஸ்பூன், இஞ்சி – சிறிதளவு, பூண்டு – 5 பற்கள், பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – சிறிதளவு, வெங்காயம் – 1, தக்காளி - 1, கரம் மசாலா – 1 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு.
Advertisment
Advertisement
சப்பாத்தி டால் செய்முறை: பருப்பு வகைகளை முதலில் 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு கலந்து ஒரு குக்கரில் வைத்து 3 விசில் வரை வேக விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் சிறிது பெருங்காயத் தூள் தூவி நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து தொடர்ந்து வதக்கவும். வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் போட்டு கிண்டுங்கள்.
மசாலா நன்றாக கொதித்ததும் அதில் நாம் ஏற்கனவே வேகவைத்த பருப்பினை எடுத்து ஊற்றி மீண்டும் அதனை 10 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும். பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சப்பாத்தி டால் தயார்.
குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்ற அருமையான டிஷ் இது, தோசைக்கும்கூட இதை பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"