Recipe News In Tamil, Ven Pongal Tamil Video: வெண் பொங்கல் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காலை உணவுக்கு பலரும் விரும்புகிற உணவு இது. பாசிப் பருப்பு முந்திரி கலந்து வெண் பொங்கல் தயார் செய்தால் அதன் சுவையே தனிதான்!
Advertisment
தைப் பொங்கலையொட்டியும் நம் வீடுகளில் கட்டாயம் இடம் பெறும் உணவுப் பொருள் வெண் பொங்கல். இதை சுவையாக தயார் செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Ven Pongal Tamil Video: வெண் பொங்கல்
Advertisment
Advertisements
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சரிசமமாக கலந்து சிறிது நேரம் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். இஞ்சி, மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிப்பதற்கு எண்ணெய், நெய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை தேவைக்கு எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை ஒரு பாத்திரத்தில் வேகவைத்து குழைய எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலி வைத்து, அது சூடானதும் எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றவும். அவை சூடான பிறகு, கடுகு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த 3 பொருட்களும் எண்ணெயில் பொரிந்தவுடன், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தனியாக முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். குழைந்திருக்கும் சாதத்தில் இந்த மசாலாப் பொருட்கள் மற்றும் முந்திரியை சேர்த்து, நெய்யூற்றி நன்றாக கிளறி எடுத்தால் வெண் பொங்கல் ரெடி.
தொட்டுக் கொள்ள, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் நல்ல காம்பினேஷனாக அமையும். இந்த முறையில் வெண் பொங்கல் தயார் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"