Recipe Tamil News, Cooked Rice Water Tamil Video: சாதம் வடி நீர் ஒரு அற்புத பானம். சாதம் வெந்ததும், நீரை வடித்து அதனுடன் உப்பு, மிளகு தூள் கலந்து அருகலாம். இதுவே சாதம் வடி நீர் அல்லது கஞ்சி தண்ணீர். தவிர, வடி சாதம் ஆறிய பிறகு அதனுடன் வடிநீர் மற்றும் தண்ணீரை சேர்த்து கலந்து விடுவார்கள். மறுநாள் அது பழைய சோறுடன் கலந்த தண்ணீராக இருக்கும். அதன் டேஸ்டே தனி! உப்பு போட்ட இந்த ‘நீர்த்தண்ணீர்’ருக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
Advertisment
இந்த சாதம் வடிநீருக்காகவும், நீர்த்தண்ணீருக்காகவும் குக்கரை தவிர்ப்பவர்களும் உண்டு. இந்த வடி சாதம் தயார் செய்வதும்கூட கலைதான். இதிலும் நீங்கள் விருப்பம் போல தண்ணீரை அதிகமாக சேர்த்தால், சாதத்தின் சுவை பாதிக்கும்.
Cooked Rice Water Tamil Video: சாதம் வடி நீர் தமிழ் வீடியோ
Advertisment
Advertisements
ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் போதுமானது. அரிசி நீளமாக இருந்தால் 1 3/4 கப் தண்ணீர் வைக்கலாம். சிவப்பு அரிசியானால் 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை சரியாக பின்பற்றினால் சாதம் நன்றாக இருக்கும்.
சாதம் வடிநீர் அற்புதமான பலன்களைக் கொடுக்கிறது. இதைக் குடிப்பதால் உணவு சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். வயிறும் நிறைவாக இருக்கும். சோறு சாப்பிடுவதால் 650 - 1000 கலோரிகள் அதிகரிக்கும். அதேசமயம் கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும்.
இது கலோரி குறைவாக இருப்பது மட்டுமன்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவும். அதோடு உடலுக்கு ஆற்றல் அளிக்கும், உடலில் நீர்ச் சத்து வற்றுவதிலிருந்து பாதுகாக்கும். வயிற்றுப் போக்கு உள்ளிட்ட மற்ற உடல் உபாதைகளுக்கும் உதவும்.
சாதம் வடி நீர் மற்றும் நீர்த் தண்ணீர் அருந்தி பலன்களைப் பெறுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"