Recipe Tamil News, sesame powder tamil video: சிறு தானிய வகைகளில் ஒன்றான எள்ளு, சத்து மிகுந்த ஒரு உணவுப் பொருள். நம் உணவில் பயன்படும் நல்லெண்ணெயின் மூலப் பொருள் இந்த எள்ளுதான். எள்ளுருண்டை, எள்ளு சாதம் என பல வடிவங்களில் எள்ளை உணவாக எடுக்கும் நடைமுறை இருக்கிறது.
Advertisment
அந்த வகையில் எள்ளுப் பொடியும் முக்கியமானது. எள்ளுப் பொடி வீட்டில் இருந்தால், இட்லி- தோசைக்கு அவசர நேரங்களில் வேறு சைட் டிஷ் தேட வேண்டாம். இட்லி- தோசை மட்டுமல்ல, சப்பாத்தி- புரோட்டாவுக்குகூட எள்ளுப் பொடி உசிதமானதே! சாதத்திற்கு கூட்டாகவும் எள்ளுப் பொடியை பயன்படுத்தலாம்.
இந்த எள்ளுப் பொடியை சுவையாக எப்படி தயார் செய்வது? என இங்கு காணலாம்.
sesame powder tamil video: எள்ளுப் பொடி
Advertisment
Advertisements
எள்ளுப் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்: எள் - 1 கப், உளுந்தம் பருப்பு - 1/4 கப், கடலைப்பருப்பு - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - 1/4 டீ ஸ்பூன், உப்பு - தேவைக்கு ஏற்ப, எண்ணெய் - தேவையான அளவு
எள்ளு பொடி செய்முறை:
வாணலி சூடானதும் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுங்கள். பிறகு அதை தனியாக எடுத்து வைக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் , பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வறுக்கவும். கடைசியாக எள்ளு, உப்பு சேர்த்து கிளற வேண்டும் .
வறுத்து முடித்து, இந்தக் கலவை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்கள். இப்போது சுவையான எள்ளு பொடி தயார் ! ஒரு முறை எள்ளுப் பொடி தயாரித்தால், ஒரு மாதம் வரை பாட்டிலில் வைத்து பயன்படுத்தலாம். எனவே அடிக்கடி டிபன், டின்னருக்கு சைட் டிஷ் தேடும் வேலை மிச்சமாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"