இந்த தேங்காய் திரட்டி பால் மிகவும் பிரபலமான ரெசிபி. இதை ஒரு முறை செய்து கொடுத்தால், மீண்டும் மீண்டும் கேப்பாங்க.
தேவையான பொருட்கள்
தேங்காய் – ஒன்று
பாசிபருப்பு- 3 ஸ்பூன்
தண்ணீர்- கல் கப்
வெல்லம்- 1 கப்
நெய்
முந்திரி
திராட்சை
ஏலக்காய் பொடி : அரை ஸ்பூன்
செய்முறை: பாசி பருப்பை நன்றாக வறுக்க வேண்டும். மிக்ஸியில் பாசி பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். முதலில் பாசி பருப்பை பொடியாக்கி, அதன் பிறகு தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளுங்கள். மீண்டும் அடுப்பில் தண்ணீருடன் வெல்லம் சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். அதை வடிகட்ட வேண்டும். சிறிய அளவு நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்துக்கொள்ளுங்கள். இதை எடுத்து தனியாக வைத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்க்க வேண்டும். அதில் தேங்காய், பருப்பு அரைத்ததை சேர்த்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக வதக்க வேண்டும். வெல்லம் கரைத்த பாகை அதில் சேர்த்து வதக்க வேண்டும். இந்நிலையில் இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக வதக்க வேண்டும். அதில் முந்திரி திரட்சையை சேர்த்துக்கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“