red chilli chutney recipe chilli chutney recipe : இட்லி, தோசை போன்றவற்றிற்கு சட்னி ஒரு சூப்பரான சைடு டிஷ். அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் சட்னி தான். ஆனால் அந்த தேங்காய் சட்னியுடன், மிளகாய் சட்னியையும் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இந்த மிளகாய் சட்னியை பலவாறு சமைப்பார்கள்.
Advertisment
இப்போது அதில் ஒரு முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்கள் சமைப்பதற்கு சரியாக இருக்கு
காய்ந்த மிளகாய் – 15
புளி – சிறிய எலுமிச்சையளவு
Advertisment
Advertisements
கடுகு – தேவையான அளவு
உளுத்தம் பருப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
வெங்காயம், தக்காளி, 3 வரமிளகாய், பூண்டு, கொத்தல்லி மற்றும் புளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் 1 வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான மிளகாய் சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.