/tamil-ie/media/media_files/uploads/2022/06/addiction-4-unspoalsh.jpg)
அதீத மன அழுத்தம் விந்தணு ஆரோக்கியம் மற்றும் பாலியல் செயல்பாடுகளை பாதிக்கலாம். இது கருவுறாமைக்கு வழிவகுக்கும்.
இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை மன அழுத்தம் கொண்டு வருகிறது. ஆனால் இதைப் பற்றி அறியாமல் மக்கள் மன அழுத்தத்தை புறக்கணிக்கின்றனர்.
இது மனச்சோர்வு, பதற்றம், தூக்கமின்மை போன்ற மனநலப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கலாம், மேலும் அன்றாட வாழ்க்கையைச் சமாளிப்பதை கடினமாக்குகிறது. மேலும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்.
அந்த வகையில், பாலியல் ஆரோக்கியத்தில் பிரச்னைக்கான முக்கிய காரணிகளில் மன அழுத்தம் முதன்மை காரணியாக உள்ளது.
இந்த மன அழுத்தம் விந்தணு ஆரோக்கியத்தையும் பாலியல் செயல்பாட்டையும் பாதிக்கலாம், இது கருவுறாமைக்கு வழிவகுக்கும்.
அதீத மன அழுத்தம் உள்ள ஆண்களுக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை, குறைந்த இயக்கம் மற்றும் விறைப்புத்தன்மை பிரச்னை ஆகியவை அதிகமாக இருக்கும்.
பெண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கும் மன அழுத்தம் ஒரு பெரிய பிரச்சனை ஆகும். ஒரு பெண் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, அவளுடைய உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இது பாலியல் தூண்டுதல் மற்றும் உடலுறவில் குறுக்கிடலாம். உறுப்பு வறட்சி மற்றும் லிபிடோ இழப்பு போன்ற பிற பாலியல் பிரச்னைகளுக்கும் மன அழுத்தம் வழிவகுக்கும்.
இதில் இருந்து விடுபடவும் சில வழிகள் உள்ளன. அவை குறித்து பார்க்கலாம்.
1) நடைபயிற்சி
மன அழுத்தத்தைக் குறைக்க வெளியில் அமைதியான நடைப்பயிற்சி செய்வது சிறந்த வழிமுறையாகும். நடைபயிற்சி என்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. மேலும் புதிய காற்று மற்றும் சூரிய ஒளியைப் பெற இது ஒரு சிறந்த வழியாகும்.
2) யோகா
தளர்வு மற்றும் நினைவாற்றலை ஊக்குவிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா உதவும். மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் ஒரு வழியைத் தேடினால், யோகா உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
3) நல்ல தொடர்புகள்
மன அழுத்தத்தை குறைக்க நல்ல வகையிலான தொடர்புகள் நமக்கு கை கொடுக்கும். இது நாம் உணரும் அழுத்தத்தின் அளவைக் குறைக்க உதவும். கூடுதலாக, தகவல்தொடர்பு உறவுகளை கட்டியெழுப்பவும் பராமரிக்கவும் உதவும்,
4) சரிவிகித உணவில் மாற்றம்
இதில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய தீர்வு இல்லை என்றாலும், டார்க் சாக்லேட், கெமோமில் டீ மற்றும் லாவெண்டர் போன்ற உணவுகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
அதேநேரம், காஃபின், ஆல்கஹால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற மன அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகளை கட்டுப்படுத்துவது அல்லது தவிர்ப்பது முக்கியம்.
5) பாடல்கள் கேட்பது
நல்ல இசையம்சம் கொண்ட பாடல்களை கேட்பதும், அதனை முனுமுனுப்பதும், தியானம் மேற்கொள்வதும் மன அழுத்தத்தை குறைக்க வழிகோலும்.
அந்த வகையில், அமைதியான இசையைக் கேட்பது இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை மெதுவாக்க உதவும், இது மன அழுத்தத்தை மேலும் குறைக்கும். நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், கொஞ்சம் இசையைக் கேட்டு முனுமுனுக்கவும். இது மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் உணர உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.