பலரும் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பது எப்படி என்று அதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கும்போது, 3 வேளையும் குதிரை வாலி அரசியை உணவாக சாப்பிட்டால் வெறும் 10 நாட்களில் சர்க்கரையைக் குறைக்கலாம் என்று டாக்டர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பலரும் ரத்தச் சர்க்கரையைக் குறைப்பது எப்படி என்று அதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கும்போது, 3 வேளையும் குதிரை வாலி அரசியை உணவாக சாப்பிட்டால் வெறும் 10 நாட்களில் சர்க்கரையைக் குறைக்கலாம் என்று டாக்டர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சர்க்கரை உலப் பொது வியாதி என்று சொல்லும் அளவுக்கு சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு காரணம், பெரிய அளவிலான வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பலரும் உணவுமுறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 3 வேளையும் குதிரை வாலி அரசியை உணவாக சாப்பிட்டால் வெறும் 10 நாட்களில் சர்க்கரையைக் குறைக்கலாம் என்று டாக்டர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டாக்டர் பன்னீர் செல்வம் யூடியூப் கூறுவதை அப்படியே இங்கே தருகிறோம். “உங்களுக்கு சுகர் குறைய வேண்டும், கட்டாயமாக எனக்கு சுகர் குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எண்ணி ஒரு 10 நாள் ட்ரீட்மெண்ட்தான். 10 நாள் ட்ரீட்மெண்ட் என்பதைவிட உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுங்கள். இந்த 10 நாள் உணவுப் பழக்கவழக்கத்தில் என்ன மாற்ற வேண்டும் என்றால், குதிரைவாலி என்று ஒரு அரிசி இருக்கிறது. இந்த அரிசியை நாம் காலையில் இட்லியாகவும் செய்துகொள்ளலாம். இரவு தோசை(குதிரைவாலி அரிசி), இட்லி (குதிரைவாலி அரிசி) மாதிரி செய்துகொள்ளலாம். மதிய உணவாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த குதிரை வாலி அரிசியை 3 வேளையும் எடுத்துகொண்டு வருகிறீர்கள் என்றால், நீங்கள் இப்போது மாத்திரையை 3 வேளை போடுகிறீர்கள் என்றால், நீங்கள் அதை 2 வேளை, 1 வேளையாக மாற்றி மறுபடியும் ஜீரோவுக்கு கொண்டுவந்துவிடலாம்” என்று கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.