காதல் கணவர், கல்லூரி செல்லும் மகள்: தெய்வமகள் அண்ணியார்!

Tamil Serial News: கர்நாடகாவைச் சேர்ந்த ரேகா முதன் முதலில் கன்னட சீரியல்களில் தான் நடிக்கத் துவங்கினார்.

By: November 7, 2020, 2:38:58 PM

Rekha Krishnappa: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் 3 வருடம் ஒளிபரப்பான சீரியல் தெய்வமகள். இது அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. தெய்வமகள் சீரியலில் அண்ணியார் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து, அதிரடி காட்டினார் ரேகா கிருஷ்ணப்பா.

Tamil Serial News, Deivamagal Anniyar Rekha Krishnappa கணவர் வசந்த குமாருடன் ரேகா…

போலீஸ் கெட்-அப், இரட்டை வேடம் என்று ரசிகர்களுக்கு டபுள் விருந்து கொடுத்து வந்தார். அவருக்காக அண்ணியார் காயத்ரி ரசிகர் மன்றம் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது. சன் டிவியில் 1500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் ஒருவழியாக முடிந்தது. தெய்வமகள் சீரியலை தொடர்ந்து நந்தினி சீரியலிலும் வில்லத்தனத்தை காட்டி லேடி நம்பியார் ஆக பெயர் பெற்றார் ரேகா. தமிழில் பல சீரியல் வில்லிகள் இருந்தாலும், அதில் ஸ்பெஷலான இடம் ரேகாவுக்கு உண்டு.

Tamil Serial News, Deivamagal Anniyar Rekha Krishnappa கடற்கரையில் ஹாயாக…

கர்நாடகாவைச் சேர்ந்த ரேகா முதன் முதலில் கன்னட சீரியல்களில் தான் நடிக்கத் துவங்கினார். ஆனால் தமிழ் ரசிகர்கள் அவர் எதிர்பார்க்காத வரவேற்பை தந்தனர். தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் ரேகாவுக்கு, பன் மடங்கு புகழை தந்தது தெய்வமகள் சீரியல் தான். ரேகாவின் கணவர் வசந்த் குமார். காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால், திருமணத்துக்குப் பிறகு, நடிப்புக்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம் வசந்த். இவர்களுக்கு பூஜா என்ற மகள் இருக்கிறார். அவர் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். வீடு கர்நாடகாவில், வேலை சென்னையில் என்பதால் இரு மாநிலங்களுக்கும் மாறி மாறி பறந்துக் கொண்டிருக்கிறார்.

Tamil Serial News, Deivamagal Anniyar Rekha Krishnappa மகள் பூஜாவுடன்…

கம்பீரமான உடலமைப்பு, அதற்கேற்ற முக அமைப்பு என வில்லி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார் ரேகா. தற்போது தமிழில் எந்த சீரியலில் நடிக்காத ரேகா, தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அதே வேளையில் தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் படு பிஸியாக இருக்கிறார்.

Tamil Serial News, Deivamagal Anniyar Rekha Krishnappa நடிகர் விஜய் சேதுபதியுடன்…

சீரியல் படபிடிப்பு இல்லாத நாட்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ரேகாவுக்கு, கடற்கரை காதலியும் கூட. இதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஆதாரம். கடற்கரையில் ஹாயாக அமர்ந்து இருக்கும் படங்கள் பல அதில் இருக்கின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Rekha krishnappa deivamagal anniyar gayathri sun tv deivamagal serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X