வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 251/- க்கான ரிசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் ரிலையன்ஸ் ஜியோ புதிய வீட்டிலிருந்து வேலை பார்க்கும் (‘work from home’) பிரிபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணையதள டேட்டா மட்டுமே வழங்கப்படும் மற்ற கூடுதல் சலுகைகள் எதுவும் கிடையாது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ரூபாய் 251/- என்ற விலையில் வரும் இந்த திட்டத்தில் 51 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கப்படும். இந்த ஜியோ ரிசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தத்தில் 102GB டேட்டா வழங்கப்படும். டேட்டா வரம்பை கடந்த பிறகும் பயனர்கள் தொடர்ந்து இணையத்தை பயன்படுத்த முடியும் ஆனால் 64 kbps என்ற வேகத்தில். இந்த ரிசார்ஜ் திட்டத்தில் தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வழங்கப்படாது, இது வெறும் டேட்டா பூஸ்டர் மட்டுமே. MyJio ஆப்பில் ரூபாய் 251/-க்கான இந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டம் பற்றிய வளம்பரம் செய்யப்பட்டுள்ளதை ஜியோ பயனர்கள் பார்க்கலாம். ஜியோ இணையதளத்தில் இந்த ரிசார்ஜ் திட்டம் 4G டேட்டா வவுச்சர்கள் பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
BSNL மற்றும் ACT Fibernet ஆகிய நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு இது போன்ற திட்டத்தை அறிவித்த சிறிது நேரத்தில், ஜியோவும் இந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஜியோ தனது அனைத்து 4G டேட்டா வவுச்சர்களையும் திருத்தியமைத்துள்ளது. ஜியோவின் 4G டேட்டா வவுச்சர்கள் ரூபாய் 11/- லிருந்து துவங்குகிறது. இதில் 800MB அதிவேக 4G டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 75 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது. இரண்டாவது 4G டேட்டா வவுச்சர் ரூபாய் 21/- விலையில் கிடைக்கிறது. இதில் 2GB அதிவேக 4G டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 200 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது. ரூபாய் 51/- க்கு கிடைக்கும் மூன்றாவது டேட்டா வவுச்சரில் 6GB டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 500 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது.
இந்த பட்டியலில் மிகவும் விலை உயர்ந்தது ரூபாய் 101/- க்கு வழங்கப்படும் 4G டேட்டா, இதில் 12GB டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு 1,000 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதியும் உள்ளது. இதுதவிர ஜியோ தனது JioFibere திட்டத்தை எந்தவித சேவை கட்டணமும் இன்றி வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.