முகத்தில் இருக்கும் முடியை எப்படி நீக்குவது என்று நமக்கு பல குழப்பங்கள் இருக்கும். இந்நிலையில் வாக்சிங், ஷேவ் செய்வது என்பதைதான் நாம் எப்போதும் தேர்வு செய்யும். இந்நிலையில் வீட்டிலையே சில விஷயங்களை செய்ய முடியும்.
மஞ்சள் பொடி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் போடவும். சில நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் செய்து கழுவ வேண்டும். கடலை மாவுடன் ரோஸ் வாட்டரை சேர்க்கவும். இதையும் நமது முகத்தில் போடலாம். சிறுது நேரம் கழித்து மசாஜ் செய்து எடுத்துகொள்ளவும்.
இதுபோல முட்டையின் வெள்ளை கருவை நன்றாக அடித்துகொள்ளவும். அது நுரை பொங்க வந்ததும், அதை மாஸ் போல முகத்தில் போடவும். சிறுது நேரத்தில் அதை உரித்து எடுக்கவும்.
இதுபோல பப்பாளி மற்றும் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் போடவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து ஸ்கிரப் செய்து, அதை முகத்தில் போடவும். 20 நிமிடங்கள் கழித்து அதை கழுவி எடுக்கவும். இது முகத்திற்கு பொலிவையும் தரும். முடியையும் நீக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“