அழுக்கு பிடித்த தோசைக் கல் 10 நிமிடத்தில் கிளீன் பண்ணலாம்… ஐஸ்கட்டி வைத்து இப்படி செய்து பாருங்க!
உங்கள் தோசைக் கல்லைப் பளபளக்க வைக்கும் அற்புதமான, எளிமையான ரகசியத்தை பற்றி இந்தப் பதிவில் காணலாம். இதற்காக உங்களுக்குத் தேவைப்படுவது சில ஐஸ் கட்டிகளும், வழக்கமாகப் பாத்திரம் கழுவும் திரவம் (Dishwashing liquid) மட்டுமே.
உங்கள் தோசைக் கல்லைப் பளபளக்க வைக்கும் அற்புதமான, எளிமையான ரகசியத்தை பற்றி இந்தப் பதிவில் காணலாம். இதற்காக உங்களுக்குத் தேவைப்படுவது சில ஐஸ் கட்டிகளும், வழக்கமாகப் பாத்திரம் கழுவும் திரவம் (Dishwashing liquid) மட்டுமே.
அழுக்கு பிடித்த தோசைக் கல் 10 நிமிடத்தில் கிளீன் பண்ணலாம்… ஐஸ்கட்டி வைத்து இப்படி செய்து பாருங்க!
சமையலறையில் தோசைக்கல்லின் பங்கு அலாதியானது. தோசை, ஆம்லெட், ரொட்டி, மீன் வறுவல் எனப் பலகாரங்கள் முதல் அசைவ உணவு வரை பலவற்றையும் தயாரிக்கப் பயன்படும் தோசைக் கல்லைச் சுத்தம் செய்வது என்பது பலருக்கும் பெரிய சவால். மீன், சேப்பங்கிழங்கு (அ) கருணைக் கிழங்கு போன்றவற்றை வறுத்த பிறகு, தோசைக்கல்லில் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய் பிசுபிசுப்பும், கறைகளும் பெரும் தலை வலியைத் தரும். எவ்வளவு கழுவினாலும், அந்தப் பிசுபிசுப்பு நீங்காதது போலத் தோன்றும். ஆனால், கவலை வேண்டாம்! உங்கள் தோசைக் கல்லைப் பளபளக்க வைக்கும் அற்புதமான, எளிமையான ரகசியத்தை பற்றி இந்தப் பதிவில் காணலாம். இதற்காக உங்களுக்குத் தேவைப்படுவது சில ஐஸ் கட்டிகளும், வழக்கமாகப் பாத்திரம் கழுவும் திரவம் (Dishwashing liquid) மட்டுமே.
Advertisment
மீன் அல்லது வேறு எந்த உணவையும் வறுத்தவுடன், தோசைக்கல் இன்னும் சூடாக இருக்கும்போதே இந்த முறையைச் செய்ய வேண்டும். கல் ஆறிவிட்டால், பலன் குறைவாக இருக்கலாம். சூடான தோசைக்கல்லின் மேல் சில ஐஸ் கட்டிகளைப் போடவும். பின்னர், அதன் மேல் 2 அல்லது 3 துளிகள் பாத்திரம் கழுவும் திரவத்தைச் சேர்க்கவும். அடுப்பை ஆன் செய்து, தோசைக்கல்லில் உள்ள ஐஸ் மற்றும் சோப்புக் கலவையை லேசாக கொதிக்க விடவும். ஐஸ் உருகி, சோப்புடன் கலந்து, பிசுபிசுப்பான எண்ணெய் படிமங்களுடன் வினைபுரியத் தொடங்கும். சில வினாடிகள் கொதித்த பிறகு, அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு ஸ்கிரப்பர் அல்லது கடற்பாசி கொண்டு தோசைக்கல்லைத் தேய்த்து சுத்தம் செய்யவும். ஆச்சரியப்படும் விதமாக, எண்ணெய் பிசுக்கும் கறைகளும் எளிதாக நீங்கி, தோசைக்கல் பளிச்சென்று புதிது போல மாறிவிடும்!
சூடான தோசைக்கல்லில் ஐஸ் போடும்போது, திடீரென வெப்பநிலை மாறுவதால், படிந்திருக்கும் எண்ணெய் படிமங்கள் தளர்ந்து விடுகின்றன. சோப்பு திரவம் எண்ணெய்களைப் பிடித்துக் கொண்டு, நீரில் கரையக்கூடிய வடிவத்திற்கு மாற்றுகிறது. கொதிக்கும்போது, இந்தச் செயல்முறை மேலும் தீவிரமடைந்து, பிசுபிசுப்பான கறைகள் எளிதாக நீங்க உதவுகிறது. இனி உங்கள் தோசைக்கல்லைச் சுத்தம் செய்வது ஒரு சிரமமான வேலையாக இருக்காது.