முகப்பருக்கள் என்றாலே முகத்தை மூடும் பலரை நாம் பார்த்திருப்போம். இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு மிகப் பெரிய எதிரி முகப்பருவே ஆகும். இப்போது வரும் விளம்பரங்களில் கூட ஆண்கள் கண்ணாடியில் முகத்தை பார்த்து கத்துவது, முகப்பருவை நண்பர்களிடம் காட்டாமல் மறைப்பது என ஆண்களுக்கும் மிகப்பெரியன்பிரச்சனையாக முகப்பருக்கள் உருவெடுத்துள்ளது.
இந்த பருக்களை எப்படி விரட்டுவது என்றால் மிகவும் கடினம் தான். காரணம், முகத்தில் படியும் தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனி பாக்டீரியாவாக உருமாறி கடைசியில் முகப்பருவாக மாறிகின்றன.
என்னத்தான் திரைப்படங்களில் காட்டுவது போல் முகப்பருக்களும் ஒருவிதமான அழகு என்றாலும், பலருக்கு முகப்பருக்கள் என்றாலே அலர்ஜி தான். அதுவும், பருக்கள் வந்து சென்றப் பின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தழும்புகள் அவ்வளவு எளிதில் போவதில்லை.
இப்படி இளைஞர்களின் சாவாலான பிரச்சனையாக இருக்கும் முகப்பருவை போக்க சில வழிகள் உள்ளன. அவை என்ன என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
பூண்டு:
பூண்டில் கிருமிகளை அழிக்கும் நாடிப்பொருள் உள்ளது. முகப்பரு உள்ள இடத்தில் ஒரு துளி பூண்டு சாற்றினை தடவி 5-10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி முகப்பரு வரும் அறிகுறி தெரிந்த உடனே செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஆரம்ப கட்டத்திலியே வராமல் தடுத்து விடலாம்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவினால், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.
பேக்கிங் சோடா :
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் நீங்கி விடும்.
கடுகு:
கடுகில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இது முகப்பருவை வேறோடு அழிக்கக் கூடியது. எனவே 1/4 டீஸ்பூன் கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
ஐஸ்கட்டிகள் :
ஐஸ் கட்டிகளை முகப்பரு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் முகப்பரு இருந்த இடமே இல்லாமலேயே போய்விடும்.