Advertisment

Republic Day 2019 Images: குடியரசு தினம் வந்தாச்சு.. நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Happy Republic Day Images for WhatsApp Status, Facebook: அனைவருக்கும் மறக்காமல் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Republic Day 2019 Images

Republic Day 2019 Images

Republic Day 2019 Images : 70 வது குடியரசு தினத்தை கொண்டாட நாடே தயாராகி வருகிறது. நாளைய தினம் இந்தியா விழாக் கோலம் போல காட்சியளிக்கும்.

Advertisment

இந்தியாவில் சுமார் 300 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல புரட்சிகளையும், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகத்தையும் நம் தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், குடியரசு தினம் ஆகும்.

ஜனவரி 26ம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் அகில இந்திய மாநாட்டில் பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Republic Day 2019 Images, Happy Republic Day Wallpaper: குடியரசு தின வாழ்த்துக்கள்!

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க - Republic Day Parade 2019 Live: கோலாகலமாக தொடங்கிய 70வது குடியரசு தின விழா! பிரமிக்க வைக்கும் முப்படை வீரர்களின் அணிவகுப்பு!

அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது.

முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்தியர்களாக பிறந்த ஒவ்வொருவரும் பெருமைக் கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் மறக்காமல் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறது.

Republic Day 2019 Images

Republic Day 2019 Images

Republic Day 2019 Images

Republic Day 2019 Images

Republic Day 2019 Images

Republic Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment