குடியரசு தின நல்வாழ்த்துக்கள் - கொண்டாட்டத்தை நண்பர்களுடன் பகிர இதோ உங்களுக்காக...

Happy Republic Day Wishes, Quotes, Messages : இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்திற்காக போராடிய இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த தலைவர்களையும் வணங்கி இந்நாளை நாம் அவர்களுக்காக சமர்பிப்போம்.

Happy Republic Day Wishes, Quotes, Messages : இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்திற்காக போராடிய இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த தலைவர்களையும் வணங்கி இந்நாளை நாம் அவர்களுக்காக சமர்பிப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Republic Day 2020 Wishes, Republic Day Quotes

Republic Day 2020 Wishes, Republic Day Quotes

Republic Day 2020 Wishes, Images, Quotes, Messages: தேசம் முழுவதும் நாளை 71வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாளை காலை தேசிய போர் நினைவிடத்தில் நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்காக மலர் வளையம் வைக்கிறார். அங்கிருந்து நாளைய குடியரசு தின கொண்டாட்டங்கள் துவங்குகிறது.

Advertisment

மேலும் படிக்க : 71வது குடியரசு தினம் : டெல்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?

publive-image

இந்தியாவின் சுதந்திர வரலாறு மிக நீளமானது. மிகவும் அமைதியான முறையில் அந்நிய நாட்டின் பிடியில் இருந்து சுதந்திரமே எங்கள் மூச்சு என்று போராடி பல்வேறு தலைவர்கள் இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்தனர்.

Advertisment
Advertisements

publive-image

இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் அதே போன்று உலகின் மிக பெரியதும், அனைவராலும் மதிக்கப்பெற்ற ஒன்றும் கூட. இந்திய அரசியல் அமைப்பினை நாம் ஏற்றுக் கொண்டு, இந்தியாவை ஒரு ஜனநாயக நாடு என்று அறிவித்துக் கொண்டதை நினைவு கூறும் விதமாக இந்த குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

publive-image

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் அணி வகுப்பில் இந்திய ராணுவ வீரர்கள், துணை ராணுவர்கள், பெண் படையினர், டெல்லி காவல்துறையினர், எல்லை பாதுகாப்பு படையின் பிரிவினர் பங்கேற்பார்கள்.

publive-image

அதே போன்று இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் சிறந்த கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளும் ஊர்வலமாக நடத்தப்படும் . இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதில் பங்கேற்றாலும் சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் நாளை இடம் பெறாது.

publive-image

நம்முடைய நாட்டுக்கான பற்றினை வெளிப்படுத்தும் தினமாகவும் இவ்விழா இந்தியா முழுவதும் கொடியேற்றத்துடன் துவங்கும். அதே நேரத்தில் மாநில தலைநகரங்களிலும் விழாக்கள் கோலகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

publive-image

சென்னையிலும் நாளை காலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். டெல்லியில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க பிரேசில் நாட்டு அதிபர் இந்தியா வந்துள்ளார்.

publive-image

இந்நன்னாளில், இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்திற்காக போராடிய இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த தலைவர்களையும் வணங்கி இந்நாளை நாம் அவர்களுக்காக சமர்பிப்போம்.

publive-image

குடியரசு தின விழாவிற்கு சிறப்பான வாழ்த்து அட்டைகளையும், செய்திகளையும் நீங்கள் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றீர்களா? இந்த புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை பதிவிறக்கம் செய்து நீங்கள் தாரளமாக அனுப்பிக் கொள்ளலாம்.

publive-image

India Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: