Republic Day 2021 Wishes and Quotes Tamil : இந்தியாவில் குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியா ஓர் சுதந்திர குடியரசாக மாறிய நாளாக இது அனுசரிக்கப்படுகிறது . நவம்பர் 26, 1949 அன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு, ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டு, இந்தியா ஒரு குடியரசு நாடாக 72 ஆண்டினை கொண்டாடுகிறது.
இந்த நாளைக் கொண்டாடுவதற்காக, நாட்டிற்குப் பெருமை மற்றும் தேசபக்தி உணர்வைத் தூண்டும் பல படங்கள் மற்றும் மேற்கோள்களை இங்கே தொகுத்துள்ளோம். இந்த செய்திகளையும் மேற்கோள்களையும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
*இந்தியா அன்பு மற்றும் பாசத்தால் பிணைக்கப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு. குடியரசு தினத்தின் புனித நாளான இன்று, ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் அன்புடனும் கொண்டாட ஒன்றாக இணைவோம்.
Republic Day wishes
*இந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க நாளின் 72-வது ஆண்டில், அவர்களின் தியாகங்களை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம். குடியரசு தின வாழ்த்துகள் 2021!
*தேசபக்தி என்பது நாட்டின் அன்பு.
ஆனால், உங்கள் நாட்டு மக்களை நேசிக்காமல் நாட்டை நேசிக்க முடியாது
இதை நாம் எப்போதும் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை
ஆனால், நாம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டும்
பொதுவான நிலையைக் கண்டுபிடிக்க வேண்டும்
பொதுவான நன்மையைத் தொடர நம் வேறுபாடுகளுக்குக் குறுக்கே பாலங்களை உருவாக்க வேண்டும்.
குடியரசு தின வாழ்த்துகள்!
Republic day 2021 wishes
* 31 மாநிலங்கள்,
1618 மொழிகள்,
6400 சாதிகள்,
6 மதங்கள்,
6 இனக்குழுக்கள்,
29 முக்கிய திருவிழாக்கள் ஆனால் ஒரே நாடு!
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்!
குடியரசு தின வாழ்த்துகள் 2021!
*இந்த நாளில், உங்கள் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்,
நம் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
அது நம் அனைவருக்கும் இருக்கும் கடமை !!
நான் ஒரு இந்தியர் என்பதில் பெருமைப்படுகிறேன்.
குடியரசு தின வாழ்த்துகள்!
Republic day 2021 quotes in Tamil
*நம் துணிச்சலான சுதந்திரப் போராளிகளின் கடின தியாகங்களை வீணாக விடமாட்டோம் என்று வாக்குறுதியளிப்போம். நம்முடைய நாட்டை உலகிலேயே சிறந்த நாடாக மாற்ற முயற்சி செய்வோம்! இனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021!
*மனதில் சுதந்திரம், வார்த்தைகளில் வலிமை, ரத்தத்தில் தூய்மை, ஆத்மாக்களில் பெருமை, இதயத்தில் வைராக்கியம்.. குடியரசு தினத்தன்று நம்முடைய இந்தியாவுக்கு வணக்கம் செலுத்துவோம். இனிய குடியரசு தினம் 2021.
Republic day 2021 wishes in Tamil
*இந்த சிறப்பு நாளில், நம் பாரம்பரியத்தையும் நெறிமுறைகளையும் வளப்படுத்தவும் பாதுகாக்கவும் எல்லாவற்றையும் செய்வோம் என்று தாய்நாட்டிற்கு உறுதியளிப்போம். இனிய குடியரசு தினம் 2021.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"