New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-2-49.jpg)
republic day 2021 wishes happy republic day
republic day 2021 wishes happy republic day
republic day 2021 wishes happy republic day : 72 வது குடியரசு தினத்தை கொண்டாட நாடே தயாராகி வருகிறது. நாளைய தினம் இந்தியா விழாக் கோலம் போல காட்சியளிக்கும்.
ஜனவரி 26ம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் அகில இந்திய மாநாட்டில் பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் சுமார் 300 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல புரட்சிகளையும், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகத்தையும் நம் தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், குடியரசு தினம் ஆகும்.
மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியர்களாக பிறந்த ஒவ்வொருவரும் பெருமைக் கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் மறக்காமல் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
உங்களுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.