ஜனவரி 26-ம் தேதி (நாளை) குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகப்பட்டு 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. டெல்லி செங்கோட்டை தொடங்கி ஒவ்வொரு மாநிலமும் நாளை தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜ்பாதையில் (கர்தவ்யா பாதை) முப்படைகளின் மிடுக்கான அணிவகுப்பு, மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் ஊர்திகள், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
குடியரசு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும். தேசியக் கொடி ஏற்றப்படும். கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
மேலும், இந்த நாளில் மற்றொரு சிறப்பு உள்ளது. 1929ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் பூர்ணா ஸ்வராஜ் (சுயராஜ்யத்தை) அறிவித்தது. ஜவஹர்லால் நேரு ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். எனவே இந்த சிறப்புமிக்க நாளில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவோம். சுதந்திர இந்தியாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். நம் அன்புக்குரியவர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி கொண்டாடுவோம்.

ஞானம் – வயதினால் அல்ல, கல்வி மற்றும் கற்றலில் இருந்து வருகிறது. குடியரசு தின வாழ்த்துக்கள்!
எங்கள் மகத்தான தேசத்திற்கு ஆயிரம் வணக்கங்கள். நாடு மென்மேலும் வளரட்டும். குடியரசு தின வாழ்த்துகள்!
Freedom in the mind,
Strength in the words,
The pureness in our blood,
Pride in our souls,
Zeal in our hearts,
Let’s salute our India on Republic Day.
இன்று ஜனவரி 26. நம் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், குடியரசுக்காவும் போராடிய மாவீரர்களை, தலைவர்களை நினைவுகூரும் வரலாற்று நாள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/