/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-6.jpg)
reshma muralidharan instagram reshma madhan
reshma muralidharan instagram reshma madhan : சின்னத்திரை நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே இருக்கும். குடும்பம், அதிலிருக்கும் பிரச்னைகள் தான் பொதுவாக சீரியல்களின் கதைகளமாக இருக்கும். அதனால் சாதாரண மக்கள் அதோடு விரைவில் நெருக்கமாகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சுடவா’ சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
அந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவருடைய துறுதுறுப்பான நடிப்பு இந்த சீரியலின் பெரிய பிளஸ். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியல் நகைச்சுவை கலந்த கதை என்பதால், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ரேஷ்மா பிறந்தது கேரளாவில், வளர்ந்தது பெங்களூருவில். மாடலிங் துறையில் கொண்டிருந்த ஈர்ப்பால், சென்னைக்கு மூட்டையைக் கட்டியிருக்கிறார். 2015-ல் சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் முதல் 10 இடத்திற்குள் வந்திருந்தார். 2016-ல் நடந்த ஃபேஷன் ஷோவில் இரண்டாவது runner-up ஆகவும் வந்திருக்கிறார். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ராகவ் உடன் இணைந்து ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மூலம் தமிழ் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. அவர் நடிப்பின் மீது உள்ள வெறியையும் நடனத்தின் மீது அவருக்கு இருக்கிற காதலையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு ’பூவே பூச்சூடவா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், ரேஷ்மா, மதன் பாண்டியன் இருவரும் புத்தாண்டு தினத்தில் தங்கள் காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மதன் பாண்டியன், “இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷலானது. எனக்கு ஸ்பெஷலானவர் என்றென்ன்றும் என்னவளாகிறார். புத்தாண்டில் இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் நாங்கள் திருமண பந்தத்தில் இணைய உள்ளோம் உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்தில் திருமண செய்தியை அறிவித்தோம்” என்று கூறியுள்ளார். ரேஷ்மா முரளிதரனும் தன்னுடைய பெயருக்கு பின்னால் தனது கணவரின் பெயரை பதிவிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.