ரெட்டினாய்டு, சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதிலும், அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரெட்டினாய்டு (Retinoids) தோல் செல் வளர்ச்சி மற்றும் வேறுபாட்டைக் கட்டுப்படுத்தும் திறனுக்காக அறியப்படுகின்றன, மேலும் முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ளிட்ட பல்வேறு தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இது எரிச்சல், வறட்சி மற்றும் அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று தோல் மருத்துவர் ஸ்வேதா அகர்வால் கூறினார்.
எனவே, ரெட்டினாய்டுகளைப் பயன்படுத்தும்போது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தோல் மருத்துவர் மானசி ஷிரோலிகர் விளக்கினார்.
நிபுணரின் கூற்றுப்படி, ரெட்டினாய்டு உதவும் சில விஷயங்கள் இங்கே:
* கொலாஜன் தொகுப்பை அதிகரிக்கவும் (இது வயதாகும் போது குறைகிறது)
* பிக்மென்டேஷனை குறைக்கும்
* முகப்பரு வராமல் தடுக்கும்
*முகப்பரு தழும்புகளை குறைக்க உதவும்
கூடுதலாக, இது வயதான அறிகுறிகளை மெதுவாக்கலாம், துளைகளை திறந்து, சருமத்தை மென்மையாக்கலாம் என்று டாக்டர் அகர்வால் கூறினார். ரெட்டினாய்டு பொதுவாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள், கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் தோல் அழற்சி (eczema, rosacea) போன்ற சில மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் ரெட்டினாய்டுப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது ஒரு சுகாதார நிபுணரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும், என்று அவர் கூறினார்.
ரெட்டினாய்டு சூரிய ஒளிக்கு, உணர்திறனை அதிகரிக்கலாம், எனவே அவற்றைப் பயன்படுத்தும் போது சன் ஸ்கீரின் பயன்படுத்துவது முக்கியம் என்று நிபுணர் மேலும் கூறினார். சென்சிட்டிவ் தோல் அல்லது தோல் எரிச்சல் உள்ளவர்கள் ரெட்டினாய்டு பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை வறட்சி, சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
ஒருவரின் 20-களின் பிற்பகுதியில் அல்லது 30-களின் பிற்பகுதியில் இதைத் தொடங்க டாக்டர் ஷிரோலிகர் பரிந்துரைத்தார். ஆனால் 20 களின் ஆரம்பத்தில் அல்லது நடுப்பகுதியில், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், ஏஜ் ஸ்பாட்ஸ் அல்லது பிக்மென்டேஷன் போன்றவற்றில் இது தொடங்கப்படலாம்.
ரெட்டினோலை “1% அல்லது 2% கிரானாக்டிவ் ரெட்டினாய்டு மூலம் தொடங்கவும், ஏனெனில் இது தோலில் மென்மையாக இருக்கும்” என்று ஷிரோலிகர் கூறினார்.
முதலில் வாரத்திற்கு இரண்டு முறை அதைப் பயன்படுத்தவும், பிறகு இரண்டு நாளைக்கு ஒருமுறை இரவில் பயன்படுத்தவும். பின்னர், ஒவ்வொரு இரவும் பயன்படுத்தவும். இரவில் முகத்தை சுத்தம் செய்த பிறகு உலர்ந்த சருமத்தில் தடவுங்கள். பட்டாணி அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ரெட்டினாய்டை மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றில் பயன்படுத்தலாம் என்று டாக்டர் ஷிரோலிகர் கூறினார்:
* மாய்ஸ்சரைசருக்கு முன் (அதிகமாக ஊடுருவுகிறது)
* மாய்ஸ்சரைசருடன்
* மாய்ஸ்சரைசருக்குப் பிறகு மீண்டும் மாய்ஸ்சரைசரைக் கொண்டு மேலே தடவும், இது ‘தி ரெட்டினாய்டு சாண்ட்விச்’ என்று கூறப்படுகிறது. இதில் எரிச்சலுக்கான வாய்ப்பு குறைவு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“