Reuben Singh's latest Rolls-Royce collection : சிலருக்கு கார் ஓட்ட பிடிக்கும். சிலருக்கு பைக் ஓட்ட பிடிக்கும். சிலர் சூப்பர் கார்/பைக் என்றால் ஓவர் கிரேஸ் ஆவதும் வழக்கம். இதோ இந்த இந்திய வம்சாவளி தன்னுடைய சம்பாத்தியத்தை எல்லாம் சூப்பர் கார் வாங்குவதற்கே செலவிட்டிருக்கிறார்.
இதுவரை இவரிடம் 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. புகாட்டி, போர்ஸ்ச்சே, பகானி, லாம்போர்கினி, ஃபெராரி போன்ற லக்ஸூரி கார்களையும் வைத்திருக்கிறார் இவர். ஃபெராரி தயாரித்த ஒரே ஒரு F12 பெர்லினெட்டா லிமிட்டட் எடிசன் காரையும் இவர் தான் வைத்திருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/Reuben-Singhs-Car-Collection-3.jpg)
ரெயூபன் சிங் - இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆவார். தொழிலதிபரான இவர் இங்கிலாந்தின் பில்கேட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் என்றால் மிகவும் விருப்பம். சமீபத்ஹ்டில் 6 ரோல்ஸ் ராய்ஸ் காரை வெறும் 50 கோடி ரூபாய்க்கு வாங்கி “ஜ்வெல்ஸ் கலெக்சன்ஸ் பை சிங்” என்று போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
Reuben Singh's latest Rolls-Royce collection
Reuben Singh's latest Rolls-Royce collection
ஆல்டேபி.ஏ (alldayPA) என்ற நிறுவனத்தை வைத்து நடத்தும் இவர் மூன்று ஃபேண்டம் லக்ஸரி செடன் கார்களையும் மூன்று குல்லிநன் லக்ஸரி சூவி கார்களையும் வாங்கியுள்ளர். அதற்கு ரூபிஸ், ஷேப்பையர்ஸ், மற்றும் எமரெல்ட் என்று பெயரையும் சூட்டியுள்ளார் அவர்.
இந்த ஆறு கார்களையும் நேரடியாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான டோர்ஸ்டென் முல்லர் - ஓட்வோஸ் நேராக சென்று டெலிவர் செய்துள்ளார்.
2017ம் ஆண்டில் இருந்து இணையத்தில் பிரபலமான ஒருவராக இருக்கிறார் ரெயூபன் சிங். ஒருவர் தன்னுடைய தலைப்பாகையை கிண்டல் செய்த ஒரே காரணத்திற்காக ஏழு நாட்கள் ஏழு தலைப்பாகை, அந்த நிறங்களுக்கு ஏற்றவாறு ரோல்ஸ் ராய்ஸ் என்று சேலஞ்ச் செய்து வைரல் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/Reuben-Singhs-Car-Collection-8.jpg)