scorecardresearch

முடக்கு வாதம்: வீக்கம், வலியைப் போக்க உதவும் ஆயுர்வேத வைத்தியம்

முடக்கு வாதம் அஜீரணத்தால் ஏற்படுகிறது, கீல்வாதம் போன்ற மூட்டுகளில் உராய்வு காரணமாக அல்ல.

முடக்கு வாதம்: வீக்கம், வலியைப் போக்க உதவும் ஆயுர்வேத வைத்தியம்
Ayurvedic remedies for Rheumatoid arthriti

முடக்கு வாதம் இனி வயதானவர்களுக்கு மட்டும் அல்ல, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உட்பட இளைஞர்களிடையே இந்த நிலைமை அதிகரித்து வருகிறது என்று புனேவின் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் விஸ்வஜீத் சவான் கூறினார், அதே நேரத்தில் 15-20 சதவீத இளம் நோயாளிகள் (35-40 வயது) மூட்டு வலியாலும் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கு வாதம் என்றால் என்ன?

Rheumatoid arthritis (RA) என்று அழைக்கப்படும் முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு. அதாவது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பு, உங்கள் சொந்த செல்கள் மற்றும் வெளி செல்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அடையாளம் காண முடியாதபோது ஆட்டோ இம்யூன் நோய் ஏற்படுகிறது, இதனால் உடல் சாதாரண செல்களை தவறாக தாக்குகிறது.

முடக்கு வாதம் மூட்டுகள், தோல், கண்கள், நுரையீரல், இதயம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. இது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு உடல் திசுக்களைத் தாக்கத் தொடங்கும் ஒரு நிலை என்று ஆயுர்வேத நிபுணர், விகாஸ் சாவ்லா கூறினார்.

அறிகுறிகள்

2014- கேட் ஆய்வு முடக்குவாதத்தின் பின்வரும் அறிகுறிகளை பட்டியலிடுகிறது.

* சூடான, வீங்கிய மூட்டுகள்

*பாதிக்கப்பட்ட மூட்டுகளின் சமச்சீர் முறை

* சோர்வு, அவ்வப்போது காய்ச்சல், ஆற்றல் இழப்பு

*மணிக்கட்டு மற்றும் விரல் மூட்டுகளை அடிக்கடி பாதிக்கும் மூட்டு வீக்கம்

*மூட்டு வீக்கம் சில நேரங்களில் கழுத்து, தோள் பட்டை, முழங்கைகள், இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள மூட்டுகளை பாதிக்கும்.

முடக்குவாதத்தில் மூட்டுகள் பெரிய அளவிற்கு சேதமடைகின்றன, இது இறுதியில் அதன் அழிவு மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதற்கு சரியான சிகிச்சை இல்லை என்றாலும், போதுமான ஓய்வு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் எப்போதாவது அறுவை சிகிச்சை மூலம் நல்ல மருந்துகளின் கீழ் நன்கு சிகிச்சையளிக்க முடியும்.

பால் பொருட்கள், நட்ஸ், விதைகள் மற்றும் மீன்கள் மற்றும் தினசரி போதுமான சூரிய ஒளியுடன் புதிய காய்கறிகள் அடங்கிய ஆரோக்கியமான உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவர் மிஹிர் காத்ரி, முடக்குவாதம் உள்ளவர்கள் நம்பக்கூடிய சில இயற்கை வைத்தியங்களையும் பகிர்ந்துள்ளார்.

வெந்தயம்

உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியை தண்ணீருடன் கலந்து சாப்பிடவும் அல்லது ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அவற்றை மென்று தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி தேநீர்

இரண்டு கப் தண்ணீரில் சுமார் 2.5 கிராம் அல்லது அரை ஸ்பூன் சுக்குப் பொடியை கலக்கவும். இது ஒரு கப் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்பூன் நிறைய விளக்கெண்ணெய் சேர்த்து குடிக்கவும்.

மருத்துவர் காத்ரியின் கூற்றுப்படி, குடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதால், வீக்கத்துடன் கூடிய வலிக்கு இது சிறந்தது. இஞ்சி, வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. விளக்கெண்ணெய் வீக்கத்திற்கு எதிராக உதவுகிறது, என்று அவர் கூறினார்.

முருங்கைக்காய் சூப்

வீக்கம் மற்றும் வலியைப் போக்க முருங்கை சிறந்த காய்கறிகளில் ஒன்று என்று காத்ரி பகிர்ந்து கொண்டார். இது உடலில் இருந்து வீக்கத்தைக் குறைக்கிறது, மேலும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. முருங்கைக்காயை துண்டுகளாக்கி தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். அதில் கல் உப்பு, கருப்பு மிளகு சேர்க்கவும். இதை நசுக்கி வடிகட்டி குடிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

கூடுதலாக, ஒருவர் நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் செரிக்கப்படாத உணவை உடலில் இருந்து நீக்குகிறது. இது ஒருவரை இலகுவாகவும் ஆற்றலுடனும் உணர வைக்கும். இரவு உணவு இலகுவாகவும், செரிப்பதற்கு எளிதாகவும் சீக்கிரமாகவும் இருக்க வேண்டும், என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

எதை தவிர்க்க வேண்டும்?

நிபுணரின் கூற்றுப்படி, தக்காளி, தயிர், பேக்கரி பொருட்கள் மற்றும் புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான உப்பு உணவுகளை வழக்கமாக உட்கொள்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

உங்கள் உணவில் வெந்தயத்தை சேர்க்கவும்

வெந்தயம், முடக்கு வாதம் நோயாளிகளுக்கு நல்லது, இதை அதிகாலை அல்லது இரவு உணவிற்குப் பிறகு உட்கொள்ள வேண்டும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, மூட்டு வலிகளைக் குணப்படுத்துகிறது.

இஞ்சி டீ ஒரு முக்கியமான பானமாகும், இது வலி மற்றும் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் குடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. முருங்கைக்காய் சூப் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்கிறது.

வெதுவெதுப்பான நீர் வீக்கத்தை குறைக்கிறது, வயிற்றை இலகுவாக வைத்திருக்கும். இது முடக்கு வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கும், என்று சாவ்லா கூறினார்.

அவை எவ்வாறு உதவுகின்றன?

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வைத்தியங்களும் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன என்று ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பாவ்சர் சவாலியா கூறினார்.

முடக்கு வாதம் அஜீரணத்தால் ஏற்படுகிறது, கீல்வாதம் போன்ற மூட்டுகளில் உராய்வு காரணமாக அல்ல. இதற்கு மஞ்சள், இஞ்சி மற்றும் புதினாவும் வேலை செய்யும் என்று பரிந்துரைத்தார்.

மஞ்சள் ஒரு வலி நிவாரணியாக செயல்படும் மிகவும் பயனுள்ள அழற்சி எதிர்ப்பு மூலிகை. “குர்குமின் மற்றும் குர்குமினாய்டுகள் வீக்கத்தைக் குறைக்க உதவும் இரண்டு அத்தியாவசிய இரசாயனங்கள், அவை முடக்கு வாதத்துக்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வாகும்.

2020- தேசிய பயோடெக்னாலஜி தகவல் ஆய்வு மையம், ஒரு சில மூலிகைகள் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாடுகளை வெளிப்படுத்தி, வீக்கம் மற்றும் திசு சேதத்தை குறைப்பதில் பங்களிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Rheumatoid arthritis ayurvedic remedies fenugreek turmeric drumstick