Rice Benefits Tamil News: சமீப காலமாக பழுப்பு நிற அரிசி ஆரோக்கியமானதா அல்லது வெள்ளைநிற அரிசி ஆரோக்கியமானதா என சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். பழுப்பு நிற அரிசி தான் ஆரோக்கியமானது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அதே வேளையில் வெள்ளை அரிசியில் மாவு சத்து தான் உள்ளது என பலர் நினைக்கிறார்கள். இதுபோன்ற பல கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் தந்துள்ளார் ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சவுத்ரி.
"அனைத்து வகை தானியங்களின் வெளிப்புற அடுக்கிலும் பைடிக் அமிலம் உள்ளது. அது உடலின் எடையை அதிகரிப்பதோடு செரிமான உளைச்சளையும் ஏற்படுத்துகின்றது. ஆனால் செரிமான கோளாறு உள்ளவர்கள் வெள்ளை நிற அரிசியை உண்ணலாம்.
நாம் உண்ணும் அரிசியில் துத்தநாகம் எனும் கனிம சத்து இருக்கின்றது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. ஒரு கப் வெள்ளை அரிசியில் 0.6 மில்லிகிராம் மாங்கனீசு சத்து உள்ளது. இது உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டிற்கு தேவையான பல புரதங்களை செயல்படுத்துகிறது. உடலில் ஏற்படும் காயத்தை குணப்படுத்துவதற்கான கொலாஜனை உற்பத்தி செய்கின்றது. மேலும் உயிரணு சேதத்தைத் தடுக்க ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது. நன்றாக வேகவைத்த வெள்ளை நிற அரிசியை உட்கொள்வது துத்தநாகத்தை அதிகரிக்க உதவுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/diet1-300x167.jpg)
வெள்ளை நிற அரிசியுடன் ஒப்பிடும்போது பழுப்பு நிற அரிசியில் 80 சதவீதம் அதிக ஆர்சனிக் உள்ளது. ஆர்சனிக் என்பது ஹெவி மெட்டல், இதில் நச்சுத்தன்மை அதிகம் காணப்படுகின்றது வெள்ளைநிற அரிசியின் சுவைக்கு பழுப்பு நிற அரிசியோ அல்லது வேறு எந்த தானியங்களும் ஒப்பீடும் அளவுக்கு இல்லை" என்று சவுத்ரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"