எப்போதும் சருமம் சோர்வாக, முகப்பரு தழும்புகள், கரும்புள்ளிகள், ஒருவித பொலிவின்றி, சீரற்ற நிறத்துடன் இருப்பதாகக் கவலைப்படுகிறீர்களா? இந்த க்ரீம் நிச்சயம் உங்கள் கவலைகளைப் போக்கும். இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உங்கள் சருமம் கண்ணாடி போல் பிரகாசிக்கும். மாசு மருவின்றி, ஆரோக்கியமான பளபளப்புடன், செயற்கையாக இல்லாமல் இயற்கையான அழகை இந்த க்ரீம் உங்களுக்குப் பெற்றுத் தரும்.
Advertisment
இந்த க்ரீம் உங்கள் சருமத்தில் அரை மணி நேரம் வைத்திருந்து, பிறகு கழுவினால் போதும், அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள்.
இந்த அற்புத க்ரீமைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள்
அரிசி (சாதம் சமைக்கப் பயன்படுத்தும் அரிசி) பாதாம் எண்ணெய் (அல்லது வைட்டமின் ஈ எண்ணெய்) - 1 டேபிள்ஸ்பூன் ரெடிமேட் கற்றாழை ஜெல் - தாராளமாக
Advertisment
Advertisements
செய்முறை:
முதலில், அரிசியுடன் தண்ணீர் சேர்த்து 8 முதல் 9 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். ஊறிய அரிசியை அதனுடன் ஊறிய தண்ணீருடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அரிசியில் வயதான தோற்றத்தைத் தடுக்கும் பண்புகள் (anti-aging properties) அதிகம் உள்ளன. இது சருமத்தை இறுக்கி, சுருக்கங்களைக் குறைத்து, பளபளப்பான, கண்ணாடி போன்ற சருமத்தைப் பெற உதவுகிறது. இந்தக் கலவையை நன்றாக அரைத்துக் கொள்ளவும். கெட்டியாக இல்லாமல், நீர் போன்ற பதத்தில் அரைக்க வேண்டும். ஊறிய தண்ணீர் போதவில்லை என்றால், சாதாரண நீரைக் கூட சேர்த்து அரைக்கலாம்.
அரைத்த இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக வடிகட்டி, எசென்ஸை மட்டும் தனியாக எடுக்கவும். இந்த க்ரீம் அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், முகப்பரு உள்ளவர்கள் கூட பயன்படுத்தலாம்.
இப்போது அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு வாணலியை வைக்கவும். இந்தச் செயல்முறை முழுவதும் குறைந்த தீயிலேயே இருக்க வேண்டும். அதிக தீயில் வைத்தால், க்ரீம் சீக்கிரம் கெட்டியாகிவிடும்.
வடிகட்டிய எசென்ஸை வாணலியில் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். கிளறிக் கொண்டே வர வர, நீர்மமாக இருக்கும் கலவை கெட்டியாக மாறுவதைக் காண்பீர்கள். சற்று கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ரொம்ப கெட்டியாக விட வேண்டாம். அடுப்பிலிருந்து எடுத்த பிறகு, இந்தக் கலவையை நன்றாக ஆற விடவும்.
மேஜிக் க்ரீம்
நன்றாக ஆறிய பிறகு, இந்தக் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ ஆயில் சேர்க்கவும். தாராளமாக கற்றாழை ஜெல் சேர்க்கவும். உங்களுக்கு கற்றாழை ஜெல் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், குங்குமப்பூ ஜெல், வேப்பிலை ஜெல், துளசி ஜெல் போன்ற வேறு ஏதேனும் ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
இப்போது மிக்ஸி ஜாரில் உள்ள இந்தக் கலவையை ஒரே ஒரு முறை மட்டும் திருப்பி அரைக்கவும். மிக நீண்ட நேரம் அரைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் க்ரீம் தண்ணீர் போல் ஆகிவிடும். ஒரே ஒரு முறை திருப்பி அரைத்தால் போதும், உங்களுக்கு அழகான க்ரீம் பதம் கிடைக்கும். இப்போது நம்முடைய சூப்பரான க்ரீம் தயாராகிவிட்டது! இதை நீங்கள் பிரிட்ஜில் 10 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
இந்த க்ரீமை ஓவர்நைட் பயன்படுத்த வேண்டியதில்லை. தினமும் அரை மணி நேரம் உங்கள் சருமத்தில் வைத்திருக்கவும். பிறகு சாதாரண நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் சருமம் கண்ணாடி போல் மின்னும்!
எப்படி அப்ளை செய்வது?
க்ரீமை கையால் எடுக்காமல், ஸ்பூனைப் பயன்படுத்தி எடுக்கவும். சிறிதளவு க்ரீமை எடுத்து, முகத்தில் ஆங்காங்கே புள்ளிகளாக வைத்து, மென்மையாக மசாஜ் செய்யவும். அவ்வளவுதான்! அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள். உங்கள் சருமம் உடனடியாகப் பொலிவுடன், பளபளப்பாக இருக்கும். மேலும், சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருப்பதை உணர்வீர்கள்.