Rice Kanji Recipe Tamil, Pachai Payaru Rice Kanji Tamil Video: பச்சைப் பயறு என சொல்கிற சிறு பயறு உணவு வகைகளை அனைவருக்கும் பிடிக்கும். காரணம், அதன் சுவை- மணம் மட்டுமல்ல... புரதச் சத்து மிகுந்த ஒரு உணவுப் பொருள். அதேபோல கஞ்சி உணவு வகைகளும் நாம் தவிர்க்கக் கூடாதவை. எளிதில் ஜீரணமாகி, நம் உடலுக்கு அதிக சக்தியை தர வல்லவை இவை.
Advertisment
அந்த வகையில் சிறு பயறு கலந்த அரிசி கஞ்சி சமைத்துப் பார்த்திருக்கிறீர்களா? சுவையான சத்தான உணவாக இது அமையும். காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் இந்த உணவை பயன்படுத்தலாம். பச்சைப் பயறு அரிசி கஞ்சி எப்படி தயாரிப்பது என இங்கு பார்க்கலாம்.
Pachai Payaru Rice Kanji Tamil Video: பச்சைப் பயறு அரிசி கஞ்சி
Advertisment
Advertisements
பச்சைப் பயறு அரிசி கஞ்சி தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப், பச்சைப் பயறு - 3/4 கப், வெந்தயம் - 1 டீ ஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 4, துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 8 கப், எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
பச்சைப் பயறு அரிசி கஞ்சி செய்முறை:
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை நன்றாகக் கழுவி ஊற வைக்கவேண்டும். சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, ஊற வைத்த அரிசி, பச்சைப் பயறு ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடிவிடுங்கள். 5 விசில் வரை வேக வைக்க வேண்டும். அதன் பிறகு நீராவி வெளியேறியதும் குக்கரை இறக்குங்கள். பின்னர் உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி விட்டால் பச்சைப் பயறு - அரிசி கஞ்சி ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"