Rice kanji tamil video, coconut milk rice kanji recipe tamil nadu: எளிதில் ஜீரணமாகும் கஞ்சி வகைகள் உடலுக்கு நல்லது. இவற்றை சமைப்பதும் சுலபமானது. அந்த வகையில் தேங்காய்ப் பால்- அரிசி கஞ்சி சமைப்பது குறித்து இங்கு காணலாம்.
Advertisment
தேங்காய்ப் பால் அரிசி கஞ்சிக்கு அதிக பொருட்கள் தேவையில்லை. இது வயிற்றுப் புண்ணுக்கு அரு மருந்தாகும். வீட்டில் எப்போதும் உள்ள பொருட்களை வைத்து கஞ்சி தயாரிக்கலாம் என்பதே இதன் சிறப்பு.
Coconut milk rice kanji recipe: தேங்காய்ப் பால் அரிசி கஞ்சி
Advertisment
Advertisements
தேங்காய்ப் பால் அரிசி கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்கள்: அரிசி - ஒரு கப், நெய் - சிறிதளவு, தேங்காய்ப் பால் (ஒரே பாலாக எடுக்கவும்) - 3 கப், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
தேங்காய்ப் பால் அரிசி கஞ்சி செய்முறை:
அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். 4 கப் நீர் சேர்த்து உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிடுங்கள். 4 விசில் வந்ததும் இறக்கவும். இதை சூடாக இருக்கும் போதே நன்கு மசித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.
சிம்பிளான இந்த செய்முறையில் சுவையான சத்தான தேங்காய்ப் பால் அரிசி கஞ்சியைப் பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"