அழகான சருமம், பொலிவான கூந்தல் வேண்டுமா? அட இவ்ளோ சிம்பிளான சீக்ரெட் தானா?

அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியமான மற்றும் அழகான தோல் மற்றும் முடியைப் பராமரிக்க அவசியம்.

அரிசி தண்ணீர் சருமத்துக்கு செய்யும் அற்புதமான நன்மைகளை பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், இது உங்கள் தலைமுடியிலும் அதிசயங்களைச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அரிசி தண்ணீர் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, இது காலப்போக்கில் தொலைந்து போன பழைய ரகசியம், ஆனால் இப்போது படிப்படியாக மீண்டும் வருகி றது.

ஜப்பானில் ஹெயன் காலத்தில் (794 முதல் 1185 வரை) பெண்கள் தரையை தட்டும் அளவுக்கு நீளமான முடியைக் கொண்டிருந்தனர், அவர்கள் அரிசி நீரில் குளித்து ஆரோக்கியமாக இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அரிசி நீரைப் பயன்படுத்துவது முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், முடி முன்கூட்டியே வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. 

ஏன் புளித்த அரிசி தண்ணீர்?

அரிசியில் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, ஆனால் அதை தண்ணீரில் சமைப்பதால், தண்ணீரை பிரித்தெடுத்தவுடன் ஊட்டச்சத்துக்கள் கழுவப்படுகின்றன. அரிசி நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது.

“2012 ஆம் ஆண்டு ஆய்வின்படி, புளிக்கவைக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி மற்றும் தோல் செல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, அதனால்தான் அவை பொதுவான அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

அரிசி தண்ணீரை எப்படி செய்வது?

அரிசியை நன்றாக கழுவவும். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய அரியை போடவும். அதை 12 மணி நேரம், அறை வெப்ப நிலையில், ஊறவைக்க வேண்டும். பின்னர், தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தவும்.  இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து முடி மற்றும் சருமத்துக்கு ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம்.

நன்மைகள் என்ன?

புளித்த அரிசி நீரில் உள்ள குறைந்த pH மதிப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் அதை ஒரு சிறந்த கண்டிஷனராக மாற்றும். இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்குவதுடன், பளபளப்பையும் சேர்க்கிறது. உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தின் கடைசி படியாக இந்த மூலப்பொருளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இது உங்கள் கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது, மேலும் நீண்ட முடியில் இருந்து சிக்கை எளிதில் அகற்ற உதவுகிறது.

இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற அலன்டோயின் உள்ளது, அத்துடன் புரோட்டீன்கள் முடி தண்டை வலுப்படுத்தவும், விரிசல்களை சரிசெய்யவும் உதவும்.

கூடுதலாக, அரிசி நீர் முடி சிகிச்சையானது உராய்வைக் குறைக்கிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் கியூட்டிக்கல்ஸ்-ஐ மூடி,  கூந்தலை கூடுதல் பளபளப்பாக்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rice water for hair care routine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express