அரிசி வடித்த கஞ்சியில் பி காம்ப்ளெக்ஸ், அமினோ ஆசிட்ஸ், வைட்டமின் பி1, பி2 போன்றவை அதிகமாக இருக்கிறது. இத்தகைய நன்மைகள் நிறைந்த அரிசி வடித்த கஞ்சியை கொண்டு ஃபேஸ்பேக் எப்படி செய்வது என தற்போது பார்க்கலாம்.
முதலில் அரிசி வடித்த கஞ்சியை ஒரு கப் அளவிற்கு எடுக்க வேண்டும். இதனுடன் 2 டீஸ்பூன் தேன், 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
இதனை நம் முகத்தில் நன்றாக தேய்த்து விட்டு, சுமார் 30 நிமிடங்கள் கழித்து ஈரத்துணி கொண்டு துடைத்து விடலாம். இப்படி தினசரி செய்யலாம். இல்லையென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஃபேஸ்பேக் பயன்படுத்தலாம்.
இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் இருக்கும் டெட் செல்கள் அகற்றப்படுகின்றன. மேலும், இவை சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது. முகத்தில் மருக்கள் வருவதையும் இந்த ஃபேஸ் பேக் தடுக்கிறது. குறிப்பாக, ஜப்பானிய அழகு கலையில் இந்த அரிசி வடித்த கஞ்சி பெரிதளவு இடம்பெறுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.