/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-2020-08-27T183440.392.jpg)
rice water tamil news
Rice water tamil news, Rice water benefits: அரசியல், அறிவியல், ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் புகழ்பெற்றவர்கள் கொரியர்கள். எளிமையான தீர்வுகள் மூலம் மிகவும் சிக்கலான விசயங்களை கையாள்வார்கள். சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்க கொரியர்கள் அரிசி கழுவிய நீரை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றால் நம்புவீர்களா?
அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும், அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரிப்பதாகவும், கூந்தல் பரமரிப்பிற்கு நன்மை பயக்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
View this post on InstagramRice cubes for smooth glowing skin - full video link in the profile here ???????? @littlediypage
A post shared by LITTLE DIY (@littlediypage) on
அரிசி நீர் ஐஸ் கட்டி:
முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். சில மணி நேரம் கழித்து, அந்த நீரை வடிகட்டி எடுத்து, ஐஸ் கியூப் தட்டில் உறைய வைக்கவும். தினமும் காலையில் ஒரு ஐஸ் கட்டியால் உங்கள் முகத்தை மசாஜ் செய்யுங்கள்.
உண்மையில், அரிசி நீர் க்யூப்ஸ் பயன்படுத்திய பிறகு உங்கள் முகத்தை நீங்கள் கழுவாமல், ஈரப்பதத்தை வறண்டு போகும்படி செய்தால், உங்கள் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். அது மட்டுமல்லாமல், இது இயற்கையான சன்ஸ்கிரீனாகவும் செயல்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us