Aliko Dangote : 10 மில்லியன் டாலர் ரொக்கத்தைக் கையால் தொட்டுப் பார்க்க வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார் ஆப்பிரிக்கச் செல்வந்தர் அலிகோ டாங்கேட். இந்த செய்தி காட்டுதீ போல் இணையத்தில் பரவி வருகிறது.
பணக்காரர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் பட்டியலிட்டு பார்த்தால் அதில் முதலிடம் இடம்பிடிக்கும் வரிகள். ஆசைகள் இருக்கலாம். பேராசை இருக்கக்கூடாது என்பது தான். ஆசை இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த நிலைக்கு உயர முடியும். ஆனால் பேராசை இருந்தால் மொத்த ஆசையும் நிறைவேறா ஆசையாக மாறிவிடும்.
தனக்கு இருக்கும் ஆசையை பேராசையாக மாறாமல் பார்த்துக் கொள்வதில் செல்வந்தர்கள் கவனமாக இருப்பார்கள்.அப்படித்தான் ஆப்பிரிக்கச் செல்வந்தர் அலிகோ டாங்கேட் ஒரு விஷயத்தை செய்துள்ளார். இதை அவரே வெற்றி மற்றும் உயர்வின் ரகசியம் என்றும் இளம் தொழிலதிபர்களுடன் பகிர்ந்துள்ளார்.
நைரிஜீயாவை சேர்ந்த ஆப்பிரிக்கச் செல்வந்தர் அலிகோ டாங்கேட் ஆப்பிரிக்கா கண்டத்தின் மிகப் பெரிய செல்வந்தர். இந்த இளம் வயதில் அவர் அடைந்த உயரம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆரம்பத்தில் ஏழை நிலையில் இருந்த அலிகோ டாங்கேட் தனது தொடர் முயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளார்.
இளம் தொழிலதிபர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்ற அலிகோ டாங்கேட் அழைக்கப்பட்டார். அப்போது பேசிய அவர், “ ஆப்பிரிக்காவின் ஒட்டுமொத்த எதிர்காலம் விவசாயம் மற்றும் புதிய தொழில் நுட்பத்தை நம்பி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இளம் தொழிலதிபர்கள் விரைவில் முன்னேறலாம்.
Aliko Dangote : செல்வந்தர் அலிகோ டாங்கேட்
ஆனால் வெற்றி அடைந்த பின்பு திருப்தி அடைந்து விட கூடாது.ஆசைப்பட்டதை அடைந்தவுடன் அதை உடனே அனுபவித்து விட வேண்டும். நான் என் முதல் கோடி டாலரை சம்பாதிக்க மிகவும் சிரமப்பட்டேன். அதை சம்பாதிக்க பின்பு மொத்த பணத்தை தொட்டு பார்க்க அப்படியே வங்கியில் இருந்து எடுத்து எனது அறையிலும், காரில் வைத்து கண்ணார ரசித்தேன். இவை அனைத்தும் என்னுடையது என நினைத்து பெருமைக் கொண்டேன். அதை தொட்டு பார்த்தேன்.
ஆசை தீர்ந்த பின்பு மறுநாளே மொத்த பணத்தையும் வங்கி லாக்கரில் போட்டு விட்டேன். இதுவும் ஒருவிதமான வெற்றியின் ரகசியம்” என்று அலிகோ டாங்கேட் கூறினார்.