Advertisment

சிக்கன் பிரெஸ்ட், மீன், மாட்டிறைச்சி, டோஃபு சமைக்க கிரில்லிங் தான் பெஸ்ட்: ஊட்டச்சத்து நிபுணர்

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா ஒருவர் தவிர்க்க வேண்டிய மூன்று சமையல் முறைகளைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Cooking Tips

Right cooking method for healthy meals

புதிய தொழில்நுட்பங்கள் தோன்றி சமையல் உலகம் வளர்ந்து வருவதால், பல ஆண்டுகளாக பல்வேறு புதுமையான சமையல் முறைகள் தோன்றியுள்ளன. சரியான சமையல் முறை உணவின் சுவையை மட்டும் பாதிக்காது, இது உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் உறுதி செய்கிறது. மறுபுறம், தவறான சமையல் முறை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

Advertisment

சமீபத்தில், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா ஒருவர் தவிர்க்க வேண்டிய மூன்று சமையல் முறைகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஏர் ஃபிரையிங்

இறைச்சி மற்றும் சீஸ் போன்ற உணவுகள் ஏர் ஃபிரையிங்கில் சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்து குறையும். ஏர் ஃபிரையிங் போன்ற டிரை குக்கிங் மெத்தட்ஸ் மூலம் உணவுகள் அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் போது, ​​அட்வான்ஸ்டு கிளைகேஷன் எண்ட்-ப்ராடக்ட்ஸ் (AGEs) உற்பத்தி செய்யப்படுகின்றன.

கூடுதலாக, நீங்கள் ஏர் பிரையரில் உணவுகளை வறுக்கும்போது, ​​சூடான காற்று உணவைச் சமைக்கச் செல்கிறது, இது சில சமயங்களில் உணவை முழுமையாக சமைப்பதில்லை.

இருப்பினும், உணவியல் நிபுணர் ஜோயா சர்வே (Head Dietician, Bhatia Hospital, Mumbai) கூறுகையில், ஏர் பிரையர் உணவை சமைக்க குறைந்த வெப்பத்தைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் டீப் ஃபிரையிங் செய்யும், எண்ணெயில் 70 முதல் 80 சதவிகிதம் குறைகிறது.

ஆய்வின்படி, ஏர் பிரையர் அக்ரிலாமைடு (acrylamide) என்ற வேதிப்பொருளைக் குறைக்கிறது, இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். மாவுச்சத்துள்ள உணவுகளை (starchy foods) வறுக்கும்போது இந்த ரசாயன கலவை வெளிப்படுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

இதேபோல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் பவிஷா குமான் கூறுகையில், (Nutritionist & Dietician, Jaslok Hospital & Research Centre) கூறுகையில், ’டீப் ஃபிரையிங் உடன் ஒப்பிடும்போது ஏர் ஃபிரையிங் அதிக சத்துக்களை தக்க வைக்க உதவும்.

குறைந்த சமையல் நேரம் மற்றும் ஏர் பிரையரில் சமைக்கும் போது குறைந்த வெப்ப வெளிப்பாடு ஆகியவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பாதுகாக்க உதவுகின்றன, அவை மற்ற சமையல் முறைகளால் குறைக்கப்படலாம்.

இருப்பினும், டீப் ஃபிரையிங் சமையலுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மாற்றாக ஏர் ஃபிரையிங் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

நான் ஸ்டிக் சமையல்

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உணவை சமைப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். பொதுவாக நான்-ஸ்டிக் பான்களில் டெஃப்ளான் (PTFE) கோட்டிங், அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் போது நச்சுகளை வெளியிடும் என்று பாத்ரா பகிர்ந்து கொண்டார்.

நான்-ஸ்டிக் பான்கள் காலப்போக்கில் தேய்ந்துவிடும்.

ஸ்கிராட்சிங் அல்லது சேதமடைந்த கோட்டிங் உணவில் கலக்கும் போது, உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம். எனவே, நான்-ஸ்டிக் பான்களைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு கவலைகள் இருந்தால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், வார்ப்பிரும்பு அல்லது செராமிக் சமையல் பாத்திரங்கள் போன்ற மாற்று விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

கிரில்லிங்

Grilling

கிரில்லிங் உணவை சமைக்க ஒரு சுவையான வழியாகும். இருப்பினும், அதிக வெப்பநிலையில் மற்றும் திறந்த தீயில் கிரில் செய்வது ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் (HCAs) மற்றும் பாலிசைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கும் என்று பாத்ரா கூறினார்.

மறுபுறம், உணவுகளை கிரில்லிங்கில் சமைப்பது ஆரோக்கியமானது என்று ஜோயா சர்வே கூறினார், ஏனெனில் இது ஃபிரையிங் போன்ற பிற முறைகளின் அடிப்படையில் கொழுப்பு உட்கொள்ளலைக் குறைக்கிறது. மேலும், குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துக்கள் உணவுப் பொருளால் தக்கவைக்கப்படுகின்றன.

கிரில்லிங், உணவுக்கு ஒரு ஸ்மோக்கி ஃபிளெவர் சுவை அளிக்கிறது, அதிகப்படியான எண்ணெய் அல்லது சாஸ் இல்லாமல் சுவையை அதிகரிக்கிறது. கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.

மேலும், சிக்கன் பிரெஸ்ட், மீன் அல்லது மாட்டிறைச்சி, காய்கறிகள், பழங்கள் மற்றும் டோஃபு அல்லது டெம்பே போன்ற தாவர அடிப்படையிலான புரத மூலங்கள் சமைக்க இது மிகவும் பொருத்தமானது.

 Read in English: Healthy cooking methods: Here’s what you need to know

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment