மிகவும் தனிப்பட்ட விஷயம், புரிந்துகொள்ளவே முடியாதது, பயங்கர கலக்கம் என தற்கொலை செய்துகொள்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. ஆனால் தற்கொலை செய்துக் கொண்ட பின்பு அவர்களின் பிரிவை அந்த குடும்ப எப்படி தாங்கிக் கொள்கிறது? என்பதை எவருமே சிந்தித்து பார்க்காமல் இருப்பது இறப்பிற்கும் மேலான ஒரு வலி.
தேர்வு பயத்தில் தொடங்கி குடும்ப சூழ்நிலை, காதல் தோல்வி, கணவன் துரோகம், மனைவியின் கள்ளக்காதல் என தற்கொலை செய்துக் கொள்ளும் ஒவ்வொருக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் இருப்பது உண்மைத்தான். ஆனால் இந்த பிரச்சனைகள் எதுவாகினால் ஒரு அரைமணி நேரம் அமர்ந்து மனம் விட்டு பேசினால் போதும் மனதில் இருக்கும் அனைத்து குழப்பங்களும் தீர்ந்து விடும்.
முகத்தை பார்த்து பேசினால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரிந்து விடும், அவமானம் என்று நினைப்பவர்களுக்காவே குரல் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தர தொடங்கப்ப்ட்ட ஒரு அமைப்பு தான் ஹெல்ப்ன்லைன் ‘சினேகா’. மனதளவில் பாதிக்கப்படும் பலருக்கும் உதவ, மன நல கவுன்சிலிங் தர சினேகா தொண்டு நிறுவன அமைப்பு 25 மணி நேரமும் தயாராக உள்ளது.
தற்கொலை தடுப்பு நிபுணர் மனநல மருத்துவர் லட்சுமி விஜயக்குமார் தான் சினேகாவின் நிறுவனர். இதுக் குறித்து பேசியுள்ள அவர், “எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. எங்கள் அமைப்பின் நோக்கமே இந்தியாவை தற்கொலை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தான். இந்த ஹெல்ப்லைனிற்கு 20 வயதிலிருக்கு 50 வயது வரை இருக்கும் மக்கள் தான் பெரும்பாலும் அதிகம் கால் செய்து ஆலோசனை பெறுகின்றன.அதே போல் இம்மெயில் வழியாகவும் அதிகப்படியான பிரச்சனைகளை எங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையில் பரப்பரப்பு.. தொடரும் ஐடி ஊழியர்கள் தற்கொலை.. பகீர் பின்னணி!
இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணி இந்த நேரங்களில் வரும் ஃபோன்கால்கள் தான் அதிகம். 50 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் சினேகாவில் எங்களுடன் சேர்ந்து இந்த பணியை சிறப்புற செய்து வருகின்றன. குறைந்ததது ஒருநாளில் ஒரு நபரின் தற்கொலை எண்ணத்தையாவது மாற்றி விட்டுமோம் என்றால் அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி தான்” என்கிறார்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வதற்குத் சினேகாவின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். அதைத்தவிர
தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.