படர்தாமரை உருவாவதற்கு ஏறத்தாழ 40 வகையான பூஞ்சை காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. படர்தாமரைக்கு ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவும் தன்மை உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உள்ளாடைகளை தூய்மையாக துவைத்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல், போர்வை மற்றும் படுக்கை விரிப்பு ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. சிறு குழந்தைகளுக்கு படர்தாமரை அரிதாக தலையில் காணப்படும். துணி துவைப்பதற்கு அதிக வாசனை மிகுந்த சோப் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
இதனை குணமாக்க வீட்டு வைத்தியத்தில் வழிமுறைகள் உண்டு. சில பூண்டுகளை எடுத்து நன்றாக அரைத்து அதன் சாறை பிழிந்து சுமார் 3 சொட்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்க வேண்டும். இதனை படர்தாமரை இருக்கும் இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால், மூன்று நாள்களில் குணமாகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“