தோலில் ஏற்படும் நோய்களில் முதன்மையானது படர்தாமரை. பூஞ்சையினால் ஏற்படக் கூடிய இந்த தொற்று, பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும்.
பிறப்புறுப்பில் தொடங்கி தொடை இடுக்கு, கழுத்து என படர்தாமரை பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும். அரிக்கும் போது சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர், மற்ற பாகங்களுக்கும் பரவும்.
படர்தாமரை, தலையில் தாக்கினால் அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும்.
உடலில் எங்கு வேண்டுமானாலும் இந்த படர்தாமரை வரும். கால் விரல் நகங்களில் அதிகம் வரும். எனவே அவ்வப்போது கால் விரல்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும்.
இது ஒரு தொற்றுநோய்.
அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு, கால் இடுக்குகள் படர் தாமரை பரவும் இடங்கள். பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும்.
படர்தாமரை தாக்காமல் இருக்க காலை, இரவு என இரு வேளைகளிலும் சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். அழுக்கு துணிகளை பயன்படுத்தக் கூடாது. சலவை செய்த துணிகளையே பயன்படுத்த வேண்டும். இவற்றை பின்பற்றினால் படர்தாமரையை ஒழிக்க முடியும்.
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“