Diwali: ரிப்பன் பக்கோடா… விசேஷ நாட்களில் செஞ்சால் இன்னும் ஸ்பெஷல் தான்!

ரிப்பன் பக்கோடா, பட்டணம் பக்கோடா என்றால் பலருக்கும் பிடிக்கும்.

rippon pakkoda recipe rippon pakkoda in tamil
rippon pakkoda recipe rippon pakkoda in tamil

rippon pakkoda recipe rippon pakkoda in tamil : ரிப்பன் பக்கோடா, பட்டணம் பக்கோடா என்றால் பலருக்கும் பிடிக்கும். காரணம் மொறு மொறு ஸ்நாக்ஸ்.. வீட்டில் எளிமையாகவும் செய்யலாம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்தால் கூடுதல் விஷேசம்.

கடலை மாவு – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
வெண்ணை அல்லது நெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை அல்லது நெய் (உருக்கி ஊற்றவும்), உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் முறுக்கு குழலில், ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, பிசைந்த மாவை நிரப்பி, எண்ணெயில் வட்டமாக பிழிந்து விடவும். இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.

சூப்பரான ரிப்பன் பக்கோடா ரெடி.

கவனிக்க: மிளகாய்த்தூளிற்குப் பதிலாக, மிளகுத்தூளையும் போடலாம். விருப்பமானால், ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளையும் சேர்க்கலாம். அரிசி மாவு அதிகமாக சேர்க்கும் பொழுது, நல்ல மொரமொரப்பாக இருக்கும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rippon pakkoda recipe rippon pakkoda in tamil rippon pakkoda recipe video tamil

Next Story
லட்டு இல்லாத தீபாவளியா? சுவையும் மணமும் ஆஹா!Diwali Recipes, Laddu Making Video, Ladoo Making
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com