ரோஜா பொண்ணுன்னா சும்மாவா? அழகுல அம்மாவையே மிஞ்சிடுவார் போல!

ரோஜாவின் மகள் அன்ஷு மல்லிகா தற்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டார்.

By: Updated: September 10, 2020, 04:35:42 PM

roja daugter roja selvamani daughter Anshumalika : சினிமா திரை உலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் நடிகை ரோஜாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ரோஜா, அதன்பின்னர் இந்து, உழைப்பாளி, வீரா, ராசையா, மக்களாட்சி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.80 90 காலகட்டங்களில் வலம் வந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பலமுறை ஜோடி போட்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். பின்னர் பெப்ஸி யூனியன் தலைவர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.செல்வமணியை, ரோஜா ஜாதி, மதம், இனம் எல்லாத்தையும் தாண்டி கரம் பிடிக்க 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். இதை அவரே தன்னுடைய திருமண நாளன்று இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்திவரும் ரோஜா, அவ்வப்போது சமூக சேவைகளை செய்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சுட்டிப்பெண் போலிருந்த ரோஜாவின் மகள் அன்ஷு மல்லிகா தற்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே தோற்றமளிக்கிறார். சமீபத்தில் ரோஜாவின் மகள் பிறந்த சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. ரோஜா மகள் அஞ்சு ஏற்கனவே குழந்தைகள் பங்கு பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Roja daugter roja selvamani daughter anshumalika roja daughter instagram roja selvamani instagram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X