சன் டிவி-யில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியலில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், விஜே அக்ஷயா, காயத்ரி சாஸ்திரி, ராஜேஷ் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் தேசிய அளவிலான டாப் 10 டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பட்டியலில் கூட ‘ரோஜா’ சீரியல் இடம் பெற்றது.
அனு பற்றிய உண்மை வெளிவந்ததும் ரோஜா சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது நீலம்பரி என்ற புதிய வில்லியை இறக்கியதன் மூலம், இப்போது முற்றிலும் வேறொரு கோணத்தில் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
இப்படி தினமும் பல்வேறு புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல், சமீபத்தில் 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரிக்கு தமிழகத்தில் ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா, முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடித்தார்.
சை சை சயாரே, கிர்ராக் கிட்ஸ், ஷிரிடி சாய் கதா, மேகமாலா மற்றும் பாபாய் ஹோட்டல் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக தெலுங்கு மக்களிடையே பிரபலமானார்.
தற்போது, ரோஜா சீரியல் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
ரோஜா சீரியலில் துறுதுறு பொண்ணாக வரும் பிரியங்கா, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ரசிகர்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடுவார். அப்படித்தான் அவரின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் பிரியங்கா, கால் விரல்களில் பெடிக்கியூர் செய்துவி, நீல நிற நெயில் பாலிஷ் போட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த பலரும், பியூட்டிஃபுல், அழகான கால்கள், லவ்லி நெயில் பாலிஷ் கலர் என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.
நீங்களே செய்யக்கூடிய சில நெயில் பாலிஷ் ஹேக்ஸ் இங்கே!
உங்கள் நகத்தின் வெட்டுக்காயங்களில் தற்செயலாக பாலிஷ் விழுவதைத் தவிர்க்க, பாலிஷ் போடும் முன் உங்கள் கைகளில் லோஷன் அல்லது எண்ணெய் தடவவும். இது நகத்தை சுற்றி தோலி படும் அதிகப்படியான நெயில்பாலிஷை எளிதாக அகற்றும்.
உங்கள் நகங்களை ஐஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்
நீங்கள் பாலிஷ் போட்டதும், உங்கள் விரல் நுனிகளை ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட கிண்ணத்தில் 2 நிமிடம் நனைத்து, நெயில் பாலிஷைத் தொடாமல் மீண்டும் மீண்டும் செய்யவும். ஐஸ் வாட்டர் நெயில் பாலிஷ் உலர்த்தும் செயல்முறையை துரிதப்படுத்தும்.
வேகமாக காய வைக்க
உங்களுக்கு அதிக நேரம் இல்லை மற்றும் உங்கள் நகங்களை விரைவாக உலர்த்த வேண்டும் என்றால், அதிக வேகத்தில் ஒரு ப்ளோ-ட்ரையரைப் பயன்படுத்தி, நெயில் பாலிஷை உலர வைக்கலாம்.
பளபளக்க
நெயில் பாலிஷ் போடும் முன் முதலில் மெட்டாலிக்/முத்து போன்ற வெளிர் நிறத்தைப் பயன்படுத்தவும். அடுத்து, உங்களுக்குப் பிடித்த நிறத்தை அதன் மேல் இரண்டாவது கோட் செய்யவும். இதனால் பாலிஷ் பளபளப்பாக இருக்கும் மற்றும் அதன் பொலிவை இழக்காது. இந்த தந்திரத்தை அனைத்து வண்ணங்களிலும் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“