/indian-express-tamil/media/media_files/2025/08/31/roja-family-2025-08-31-10-48-36.jpg)
Actress Roja Family
கவர்ச்சி, நடிப்பு, அரசியல் என பல துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் நடிகை ரோஜா. 90-களில் கனவு கன்னியாக வலம் வந்த இவர், இப்போது ஆந்திர அரசியலில் ஒரு முக்கியமான அரசியல்வாதியாக மாறியுள்ளார்.
'செம்பருத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரோஜாவிற்கு, அந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணிதான் வாழ்க்கை துணையாக அமைந்தார். 'செம்பருத்தி' படப்பிடிப்பில் தொடங்கிய அவர்களின் நட்பு, பின்னர் காதலாக மலர்ந்தது. ரோஜா தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். திரையுலக நட்சத்திரங்களின் திருமணம் பற்றிய கிசுகிசுக்கள் எப்போதுமே அதிகம். ஆனால் ரோஜா - செல்வமணி ஜோடி, எந்தவித சலசலப்பும் இன்றி, தங்கள் காதலை நிஜமாக்கி, ஒரு அழகான குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.
ரோஜா - செல்வமணி தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் பெயர் அன்ஷுமாலிகா செல்வமணி, மகன் பெயர் கிருஷ்ண லோஹித் செல்வமணி. தனது குழந்தைகளை பொதுவெளியில் அதிகம் காட்டிக் கொள்ளாத ரோஜா, அவ்வப்போது சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார்.
சமீபத்தில் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆர்.கே.செல்வமணி தனது மகள் குறித்த சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நான் இல்லாததுனால என் பொண்ணுக்கு சரியா தூக்கம் வரமாட்டுக்கு. திடீர்னு நடுராத்திரி எழுந்துக்குவா. இப்ப நான் படுத்தேன்னா, நான் காலைல ஆறு மணிக்கு எழுந்தாலும் அவ எழுந்திருக்க மாட்டா. நான் அவ பக்கத்துலயே இருக்கணும். பக்கத்துலனா, கால் தூக்கி என் மேல போட்டுக்குவா. நான் அசைஞ்சேன்னா கூட, "டாடி, இப்படி திரும்பாதீங்க," அப்படின்னு சொல்லுவா. அவளுக்கு 19 வயசு ஆயிடுச்சு. ஆனாலும் அவுங்க அம்மா திட்டுவாங்க. என்ன நீ இப்படி செய்ற? அப்புறம் கல்யாணம் ஆச்சுன்னா உன்னால பொறுத்துக்க முடியாது, அப்படின்னு.
அப்போ அவ, "நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்," அப்படின்னு அவங்கம்மா கிட்ட சொல்லுவா, நீ உன் அப்பாவும் கூட கூப்பிட்டு போயிருணு என் வொய்ஃப் சொல்லுவாங்க. நானும் என் பொண்ணும் அவ்ளோ அட்டாச்மெண்ட்” என்று ஆர்.கே.செல்வமணி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
முன்பு ரோஜா ஒரு பேட்டியில், தனது கணவரும் தானும் காதலித்த காலத்தில் 24 குழந்தைகளை தத்தெடுக்கவும், பெறவும் ஆசைப்பட்டதாகக் கூறினார். ஆனால், மருத்துவர்கள் தனக்கு குழந்தை பிறக்காது என்று கூறியபோது மனம் உடைந்ததாகவும், பின்னர் இறைவன் தங்களுக்கு இரண்டு குழந்தைகளை பரிசாக அளித்ததாகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.