/tamil-ie/media/media_files/uploads/2021/05/Anu.jpg)
Roja Serial Anu Shamili Sukumar Youtube Channel Tamil News
Roja Serial Anu Shamili Sukumar Youtube Channel Tamil News : சின்னத்திரை தொடர்களில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து வரும் சன் டிவியின் 'ரோஜா' சீரியலில், முக்கிய வில்லியாக நடித்துக்கொண்டிருப்பவர் ஷாமிலி. 'அணு' என்று சொன்னால் நிச்சயம் உடனே தெரியும். அவர், தனக்கென யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி ஏராளமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/67639952_117949635993316_685991936307347330_n.jpg)
பத்து மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இவருடைய சேனலில் பெரும்பாலும் அழகு குறிப்புகள்தான் அதிகம். மணப்பெண் அலங்காரம், மேக்-அப், பியூட்டி டிப்ஸ், ரோஜா ஷூட்டிங் ஸ்பாட் நேரலை, பிராங்க் ஷோ என உபயோக டிப்ஸ் கொடுப்பது மட்டுமின்றி என்டெர்டெயினிங் காணொளிகள் பலவற்றையும் அப்லோட் செய்திருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/MKbAOkI.jpg)
இவருடைய பெரும்பாலான வீடியோக்கள் லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றிருக்கின்றன. அதிலும் ரோஜா ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையான சண்டை என்றும் தலைப்பில் வெளியான வீடியோ மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கின்றது. அதேபோல மக்களோடு நேரடி உரையாடலில் ஈடுபட்ட மற்றொரு லைவ் வீடியோ 1.3 மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கிறது.
அதேபோல சமீபத்தில் கர்ப்பமான ஷாமிலி, அந்த விஷயத்தை முதல்முதலில் தன் கணவருக்குத் தெரிவித்த நொடிகளையும் அவர் கொடுத்த சர்ப்ரைஸ்களையும் பதிவு செய்து அப்லோட் செய்தார். அதில், ஓர் ஒளிவிளக்கில் சிறிய துண்டுச்சீட்டில், 'நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்' என்று தன் கணவருக்காக மெசேஜ் ஒன்றை எழுதி வைத்திருந்தார். மேலும், அதனோடு சிக்கன் பிரியாணியையும் செய்திருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்ட அவருடைய கணவரின் ரியாக்ஷன் அனைத்தையும் பதிவு செய்திருந்தார் ஷாமிலி. இந்த கியூட் காணொளி மக்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.