‘கவிதைபோலே வந்தாலே ரோஜா..’ எனத் தமிழ்நாட்டு மக்களை முணுமுணுக்க வைத்தவர் பிரியங்கா நல்காரி. 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா தொடரின் மெயின் கதாபாத்திரம். 2 வருடங்களாகவே இன்று பூத்த பூவைப்போலச் சருமம் கொண்டிருக்கும் இவருடைய இரவு நேர சரும பராமரிப்பு வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார்.

“என்னுடைய ரொட்டின் மிகவும் சிம்பிள். எனக்கு சென்சிடிவ் ஸ்கின் என்பதால் நான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களையும் பார்த்து பார்த்துத்தான் பயன்படுத்துவேன். எப்போதுமே எந்தப் பொருள்களை வாங்குவதற்கு முன்பும் முதலில் உங்களுடைய சருமத்திற்கு அது ஏற்றதா என்பதை டெஸ்ட் செய்த பிறகே முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.

அந்த வரிசையில் என்னுடைய மேக்-அப் பொருள்கள் எல்லாம் மேக் பொருள்களைத்தான்.அதுவும் என்னுடைய சரும நிபுணர் பரிந்துரைத்ததால்தான் அந்த பொருள்களை வாங்குகிறேன். மேக்-அப் அகற்றுவதற்குத் தேங்காய் எண்ணெய் மட்டும்தான். அதன்பிறகு, ஸ்க்ரப் மற்றும் மசாஜ்ஜர் இணைந்திருக்கும் ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுவேன். இது என்னுடைய ஃபேவரைட் ஃபேஸ் வாஷ்.

இதன்பிறகு ஸ்டீமர் கொண்டு முகத்திற்கு ஃபேஷியல் செய்துகொள்வேன். இது முகத்தில் இருக்கும் அழுகை முற்றிலும் அகற்றி, போர்களை விரிவாக்குகின்றது. ஃபேஷியல் முடிந்தபிறகு மீண்டும் வெறும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி, சரும பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்தலாம்.

முதலில் டோனர் முகத்தில் அப்லை செய்துவிட்டு, சிறிது நேரம் கழித்து வைட்டமின் E கொண்ட நைட் க்ரீம் அப்லை செய்வேன். இவ்வளவுதான் என்னுடைய இரவு நேர ரொட்டின். முகத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் எந்தவித பிரச்சினையும் முகத்தில் ஏற்படாது. இதையெல்லாவற்றையும்விட இந்த செயல்முறையை தினமும் செய்தால்தான் அதற்கான பலன் கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil