Roja Serial Priyanka Nalgari Youtube Channel Review
Roja Serial Priyanka Nalgari Youtube Channel Review Tamil : சின்னத்திரை டிஆர்பி ரேட்டிங்கில் பெரும்பாலான நேரங்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ரோஜா தொடரின் நாயகி பிரியங்கா, ரியல் வாழ்க்கையில் படுசுட்டி. இவருடைய வாழ்க்கைமுறை மற்றும் பல்வேறு விதமான என்டெர்டெயினிங் மொமென்ட்டுகளை காணொளியில் பதிவு செய்து, அவற்றை தன் யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்து ஏராளமான ரசிகர்களை தன் வசமாக்கியுள்ளார். இவருடைய சேனல் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இரண்டு மொழிகளில் பேசி பதிவு செய்வதுதான்.
Advertisment
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா, ஒரே வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பேக்-டூ-பேக் பதிவு செய்து வெளியிடுகிறார். இரண்டு மொழி ரசிகர்களையும் ஈர்க்கவேண்டுமே! ஒரு வருடத்திற்கு முன்பு, லாக்டவுன் காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவருடைய சேனலில், ஏராளமான ஃபன் வீடியோக்கள் உண்டு.
Advertisment
Advertisements
இவருடைய பக்கத்தில், பெரும்பாலான காணொளிகள் தன் குடும்ப உறுப்பினர்களோடுதான் இருக்கின்றன. சமையல் என்கிற பெயரில் தன் குடும்பத்தைப் பாடாய்ப் படுத்திய பிரியங்காவின் ரியாக்ஷன்ஸ் அத்தனையும் கியூட். ஆனால், இவருடைய அம்மா இவருக்கு அப்படியே எதிர்மறை. ஏகப்பட்ட சமையல் குறிப்பு வீடியோக்களை தன் தாயை வைத்துத்தான் சேனலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் ஆயிரங்களில் போய்க்கொண்டிருந்த இவருடைய வீடியோக்கள் வியூஸ்கள், ரோஜா தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் விசிட் லட்சங்களுக்கு ஏற்றிவிட்டது. இதனைத் தொடர்ந்து, Vlog, யோகா, டயட், அழகுக் குறிப்புக்கள், ஷாப்பிங் என மற்ற பிரபலங்களின் பேட்டர்னையே இவரும் பின்பற்றினார். தசராவிற்கென தனிப்பட்ட வகையில் கான்டெஸ்ட் ஒன்றை வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
Priyanka with her Mom
என்றாலும் மக்களுக்கு பிரியங்காவை விட ரோஜாவைதான் பிடித்திருக்கிறது போல. ரோஜா ஷூட்டிங் ஸ்பாட், மேக்-அப் என ரோஜா கதாபாத்திரத்தைச் சுற்றி நடப்பவைதான் தேடித்தேடிப் பார்க்கின்றனர் ரசிகர்கள். எப்போதும் பிரியங்கா நடித்திருக்கும் ரோஜா தொடர் முதன்மையில் இருக்கையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ்களை கொண்டிருக்கும் ப்ரியங்காவின் யூடியூப் சேனல் விடியோஸ் எதுவும் ட்ரெண்டிங்கில் வந்ததில்லை என்பது ஆச்சரியமே. கேமரா மற்றும் எடிட்டிங் வெளிப்பாடுகளில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவையோ!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil