Roja Serial Priyanka Nalkari Past bitter experience Tamil News
Roja Serial Priyanka Nalkari Past bitter experience Tamil News : லாக் டவுன் இருந்தாலும் இல்லையென்றாலும் 'ரோஜா' சீரியல் ட்ரெண்டிங்கில் வராத நாட்களே இல்லை. அதிலும் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்திற்கு பிரியங்காவை காண்பதற்கே அவ்வளவு ரசிகர்கள் உண்டு. அர்ஜுனோடு ரொமான்ஸ், மாமியாருக்குப் பிடித்த மருமகள், தாயை தேடும் மகள் என ஒவ்வொரு காட்சியிலும் தன் முழுமையான நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருப்பார் பிரியங்கா. ஏராளமான அன்பை பெற்று வரும் பிரியங்கா, தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை விட்டுக்கொடுதந்திருக்கிறார்.
Advertisment
சமீபத்தில் வெளியான ஓர் நேர்காணலில், தனக்கு வரப்போகிற கணவர் பற்றிய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டதற்கு, "என்னை குழந்தைபோல பார்த்துக்கணும். திருமணத்திற்கு பிறகு புடவை, சல்வார்தான் உடுத்தவேண்டும், கவுன், ஸ்கர்ட் எல்லாரும் போடக்கூடாது என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், எனக்கு கவுன் உடுத்திக்கொள்ள மிகவும் பிடிக்கும். அதேபோல, என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான் என்னுடைய எதிர்பார்ப்பு" என்றார்.
Advertisment
Advertisements
தொடரில் மட்டுமல்ல, உண்மையிலேயே பிரியங்கா மிகவும் இளகிய மனம் கொண்டவர். தெருவில் ஏதாவதொரு நாயைநாய் பசியில் வாடுவதை பார்த்தால்கூட அழுதுவிடுவாராம். அதற்காகவே, தன்னுடைய ஹேண்ட்பேக்கில் எப்போதும் பிஸ்கட்ஸ் வைத்திருப்பாராம்.
தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரியங்கா, ஒருகாலத்தில் மூன்று வேளை சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டவர். ஒரே அறையில், தன் அம்மா, அப்பா மற்றும் இரண்டு சகோதரிகளோடு வாழ்ந்து வந்திருக்கிறார். ஓர் விபத்தில் தன்னுடைய தந்தைக்கு கால் அடிபட்டு, வீட்டிலேயே இருக்கும்படியான நிலை. அதனால் பொருளாதார வீழ்ச்சி. இரவு வேளையில் உணவு உண்ணாமல் தூங்குவது, விறகு அடுப்பில் சமைப்பது என மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.
இந்நிலையில், தன் கல்லூரி படிப்பிற்காக 10,000 ரூபாய் செலுத்தமுடியாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்தி, வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். தன் சகோதரிகளை படிக்கவும் வைத்திருக்கிறார். என்றாலும், எப்படியாவது தானும் படிக்கவேண்டும் என்கிற நோக்கில், சமீபத்தில் இன்டீரியர் டிசைனிங் படித்து முடித்திருக்கிறார் ப்ரியங்கா. தன் 15 வருட உழைப்பிற்கு பிறகு தற்போது அனைவரின் வீடுகளிலும் ரோஜாவாக மலர்ந்துகொண்டிருக்கிறார்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil