By: WebDesk
Updated: February 5, 2021, 03:14:36 PM
roja serial priyanka roja arjun roja priyanka instagram
roja serial priyanka roja arjun roja priyanka instagram : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹீரோயின். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பிரியங்கா,
அங்கே நாகர்ஜுனா, பத்மாபிரியா போன்றோருக்கு தங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு 15-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து முடித்து விட்டு, தமிழுக்கு வருகை புரிந்தார்.
தமிழில் அறிமுகமான முதல் சீரியலே பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. தான் காதலித்த ராகுலுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதோடு, நிச்சயதார்த்ததிற்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராகுல் ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார். ’தவறு யார் மீது இருந்தாலும் மறந்துவிடுவோம், திரும்பி வா’ எனவும் ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரியங்கா.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா, நாராயணகுடாவிலுள்ள பிரிலியண்ட் கிராமர் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு தர்ஷியில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா கல்லூரியில், கல்லூரி படிப்பையும் முடித்தார்.
இருபதுகளின் நடுப்பகுதியில், பிரியங்காவின் நல்ல உடலமைப்பு அவருக்கு மாடலிங் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. ‘ரகலஹாரி’, ‘வெல்கம் டு அமெரிக்கா’, ‘குன்னா மாமிடி கம்மா மீடா’ போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010-ல் ’அந்தரி பந்துவயா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் 5,6 படங்கள் நடித்த இவர், இயக்குநர் ராகவா லாரன்ஸின் ’காஞ்சனா 3’ படத்தில், நிக்கி தம்போலியின் சகோதரியாக நடித்திருந்தார்.
அம்லு, பிரியங்கா ராவ், பிரியங்கா ஸ்மைலி என பல செல்லப் பெயர்களும் உள்ளன. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பிரியங்காவுக்கு அவரது புன்னகைக்கென்றே ரசிகர்கள் அதிகம். சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில், ரோஜா – அர்ஜூனின் ரொமான்ஸ் ரசிகர்களிடம் படு பிரபலமான ஒன்று. ரோஜாவின் க்யூட்னெஸ் அத்தனை ரசிக்கும்படியாக இருக்கும்.
பிரியங்காவுக்கு காண்டினெண்டல் உணவு என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். சோர்வாக இருக்கும் போது, பாடல்கள் கேட்பதும், அதிரடி விளையாட்டுகளில் ஈடுபடுவதும் ரோஜாவின் ஃபேவரிட் விஷயங்களாம்…