நான் சம்பாதிச்சு 15 வருஷம் ஆச்சு; என் கார், டிரஸ் எல்லாம் இவங்க காசுதான்: ஆர்.கே செல்வமணி ஃபேமிலி ஷேரிங்ஸ்

நான் கடந்த 15 ஆண்டுகளாக எந்த வருமானமும் ஈட்டவில்லை என்றும், ஆனால் என் குடும்பத்தில் எனக்கு இப்போதும் அதே மரியாதை இருப்பதாகவும் பிரபல இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

நான் கடந்த 15 ஆண்டுகளாக எந்த வருமானமும் ஈட்டவில்லை என்றும், ஆனால் என் குடும்பத்தில் எனக்கு இப்போதும் அதே மரியாதை இருப்பதாகவும் பிரபல இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
RK selvamani

நான் சம்பாதிச்சு 15 வருஷம் ஆச்சு; என் கார், டிரஸ் எல்லாம் இவங்க காசுதான்: ஆர்.கே செல்வமணி ஃபேமிலி ஷேரிங்ஸ்

பிரபல இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணி, தனது குடும்ப உறவு, வருமானம் மற்றும் தனது மனைவி ரோஜாவின் பங்கு குறித்து ரெட் நூல் என்ற யூடியூப் சேனலில் நடத்தப்பட்ட நேர்க்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

15 வருடங்களாக வருமானம் இல்லை:

Advertisment

"நான் சம்பாதிச்சு 15 வருஷம் ஆச்சு" என்று ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் பலருக்கு சமூகத்தில் மரியாதை குறைவதைக் குறிப்பிட்டு, தனக்கு அந்த நிலைமை ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முக்கியக் காரணம், அவரது குடும்பத்தில் உள்ள அன்பு, புரிதல் மற்றும் மரியாதைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கார், ஆடைகள் என அனைத்தும் தனது வருமானத்தில் இருந்து வாங்கப்படவில்லை என்றும், தனது மனைவி ரோஜாவின் உழைப்பால் கிடைத்தவைதான் என்றும் அவர் கூறியுள்ளார். ரோஜா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு மனைவி, ஒரு தோழி என அனைத்து நிலைகளிலும் தனக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் அவர் பெருமையாகப் பேசியுள்ளார். மேலும், தனது நிலைமையை ரோஜா புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டதால், தனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செல்வமணி - ரோஜா தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அமெரிக்காவில் படித்து வரும் தனது மகள், படிப்பில் மிகவும் கெட்டிக்காரர் என்றும், 100-க்கு 99 மதிப்பெண் எடுத்தால்கூட வருத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு வரும்போது தன் பக்கத்தில் படுக்க வேண்டும் என அடம்பிடிப்பார் என்றும் பாசத்துடன் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

மகன் குறித்த பேச்சில், தனது மகன் சராசரி மாணவன் என்றும், அவன் விரும்பியபடி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வான் என்றும் கூறி உள்ளார். மகனுக்கு நடிகராக ஆசை என்றும், ஆனால், தனக்காக ஒரு பட்டப்படிப்பை முடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது அம்மா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அவர்களுடன் தங்குவார் என்றும், தனது மகனிடம் அவர் மிகவும் பாசமாக இருப்பார் என்றும் ஆர்.கே.செல்வமணி தனகு குடும்பத்தினர் குறித்து பகிர்ந்து கொண்டார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: