ரோஜா என்றால் பெண்களுக்கு கொள்ளைப் பிரியம். சிவப்பு, பிங்க், மஞ்சள் என கிடைக்கும் நிறங்களில் எல்லாம் ரோஜா வாங்கி தங்கள் தலை சூடி மகிழ்வர். சிலருக்கு ரோஜாவை முழுவதுமாக வைக்கப் பிடிக்கும். சிலருக்கு ரோஜா இதழ்களை கோர்த்து செய்த பூச்சரமாக சூடிக் கொள்ளப் பிடிக்கும்.
Advertisment
ஒற்றை ரோஜாவை தலையில் வைத்துக் கொள்வது எளிது. ஆனால் ரோஜா இதழ்களை கோர்ப்பது சற்று கடினமான வேலை. ஆனால் இந்த எளிய முறையை பின்பற்றினால், நீங்களும் ஈஸியாக ரோஜா இதழ்களைக் கோர்த்து பிடித்த டிசைன்களில் செய்து, சுப நிகழ்வுகளுக்கு சூடிக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் தேவையான அளவு ரோஜாக்களை எடுத்து இதழ்களை தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும். நடுவில் உள்ள சிறிய இதழ்களை நீக்கிவிட்டு, பெரிய இதழ்களை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ரோஜா காம்பில் இரண்டு சிறிய துண்டுகளை வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அளவில் சிறிய நூலை சிறிய ஊசியில் கோர்த்து கடைசியில் முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு ரோஜா காம்புவை ஊசியில் கோர்த்து நூலின் முடிச்சுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது ரோஜா இதழ்கள் நூலை விட்டுச் செல்லாமல் இருக்கும்.
அடுத்து ரோஜா இதழ்களை நேரடியாக ஊசியில் கோர்த்தால் சற்று சிரமமாக இருக்கும். எனவே ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, ஊசியின் பின்புறத்தை அதில் குத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒவ்வொரு ரோஜா இதழ்களாக மடித்து வரிசையாக ஊசியில் குத்த வேண்டும். ஊசியின் அளவு வரை குத்திய பின் உருளைக்கிழங்கில் இருந்து வெளியே எடுத்து கடைசியில் தள்ளிக் கொள்ள வேண்டும்.
இப்படியே திரும்ப திரும்ப செய்தால் அருமையான ரோஜா பூச்சரம் ரெடி. உங்களுக்கு தேவையான டிசைனில் சூடிக் கொண்டு உங்கள் சுப நிகழ்ச்சிகளை கலக்குங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“