நாம் அனைவரும் ஷாம்பூ விளம்பரங்களில் வருவதை போல நீண்ட நேரான ரம்மியமான கூந்தலை விரும்புகிறோம், மேலும் இந்த முடிவை அடைய அதிக முயற்சி செய்கிறோம். நம்மில் சிலர் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இயற்கையான பொருட்களையும் பயன்படுத்துகிறோம். ஆரோக்கியமான கூந்தலுக்கு அற்புதமாக கருதப்படும் அத்தகைய ஒரு மூலப்பொருள் ரோஸ்மேரி ஆகும்.
ஊட்டச்சத்து நிபுணர் அபூர்வா அகர்வாலின் கூற்றுப்படி, இந்த மருத்துவ தாவரமானது உங்கள் உடையக்கூடிய, கரடுமுரடான முடியை, பளபளப்பாக மாற்றும்.
இது உண்மையா? இதை கண்டுபிடிக்க நிபுணர்களை நாங்கள் அணுகினோம்
டாக்டர் ரேஷ்மா டி விஷ்னானி (consultant dermatologist, trichologist and aesthetic dermatologist at Kokilaben Dhirubhai Ambani Hospital, Mumbai) ரோஸ்மேரி, மைக்ரோ கேபில்லரி பெர்ஃப்யூஷனை (ரத்த சுழற்சி) மேம்படுத்துகிறது, இது புதிய முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். கூடுதலாக, இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது.
ஆனால் ரோஸ்மேரி ஒரு துணை சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம், முக்கிய சிகிச்சையாக அல்ல என்று டாக்டர் விஷ்னானி எச்சரித்தார். முடி உதிர்வு சிகிச்சையில் ரோஸ்மேரி அல்லது எந்த எண்ணெயையும் நான் பரிந்துரைக்கவில்லை. அதன் நன்மைகள் அல்லது பக்க விளைவுகள் பற்றி கொஞ்ச சான்றுகளே உள்ளன. சமூக வலைதளங்களில் மட்டுமே நாம் அதைப் பற்றி கேள்விப்படுகிறோம்.
நீங்கள் இன்னும் ரோஸ்மேரியைப் பயன்படுத்த விரும்பினால், அதன் கண்டிஷனிங் நன்மைகளுக்காக அதை உங்கள் ஹேர் வாஷ் செய்வதற்கு 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு எண்ணெயாகப் பயன்படுத்தலாம்.
ரோஸ்மேரியை முடியை கழுவ, ஆப்பிள் சைடர் வினிகருடன் ஓவர்நைட் மிஸ்ட், கற்றாழை ஜெல் கொண்ட ஹேர் மாஸ்க் அல்லது ஜோஜோபா, பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் ஹேர் ஆயிலாக பயன்படுத்தலாம் என அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு Skinmed இதழில் நடத்தப்பட்ட ஆய்வில், ரோஸ்மேரி எண்ணெயின் நீண்டகால பயன்பாடு, வழுக்கைக்கு பயன்படுத்தப்படும் வழக்கமான மருந்துடன் (மினாக்ஸிடில் 2%) ஒப்பிடப்பட்டது, அங்கு அது முடி வளர்ச்சியில் இதேபோன்ற விளைவைக் காட்டியுள்ளது என்று டாக்டர் பல்லவி சிங் (consultant – dermatologist and aesthetic physician, Max Multi Speciality Centre, Panchsheel Park) கூறினார்.
உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்க ரோஸ்மேரி எண்ணெயை சில துளிகள் கேரியர் எண்ணெயுடன் கலக்குமாறு அவர் அறிவுறுத்தினார். சுமார் 6 மாதங்களுக்கு வழக்கமான பயன்பாடு முடி அடர்த்தியை மேம்படுத்துகிறது, என்று டாக்டர் சிங் வலியுறுத்தினார்.
Read in English: Is rosemary the miracle ingredient you need for healthy hair?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“